என் மலர்

  நீங்கள் தேடியது "4 people arrest"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முகமது ரியாஸ் பலூன் வியாபாரம் செய்து வருகிறார்.
  • பலூன் வியாபாரி முகமது ரியாசிடம், ஆரோக்கிய–செல்வகுமார், சையது முஸ்தபா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்

  திருச்சி :

  திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பை சேர்ந்தவர் முகமது ரியாஸ் (வயது22). பலூன் வியாபாரியான இவர் காஜா பேட்டை மெயின் ரோட்டில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் பலூன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

  அப்பொழுது அங்கு வந்த முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசெல்வகுமார், சையது முஸ்தபா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

  இது குறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் பலூன் வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை இன்ஸ்பெக்டர் நிக்ஸன், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

  இதே போல் திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42). தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிந்தாமணி பஜார் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரிடம் வந்த சிந்தாமணியை சேர்ந்த வீரமணி(24), பாஸ்கர்(36) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

  இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சப் - இன்ஸ்பெக்டர் சட்டநாதன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
  • அப்போது அனுமதியன்றி மது விற்ற 4 பேரை கைது செய்தனர்.

  அரியலூர்

  அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் காந்தி ஜெயந்தி தினத்தன்று கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் சரத்குமார், ராஜா தலைமையிலான போலீசார் தா.பழூர் கடைவீதி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.

  அப்போது தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்தநல்லூரை சேர்ந்த ராம்குமார் (வயது 17) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (21) என்பவரிடமிருந்து 17 மது பாட்டில்களும், தா.பழூர் காலனி தெருவை சேர்ந்த வைகுண்டன் (43) என்பவரிடமிருந்து 5 மது பாட்டில்களும், நாயகனைபிரியாள் வடக்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (58) என்பவரிடம் இருந்து 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதையடுத்து, மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்க முயன்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
  திருச்சி:

  திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு சுற்றிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஓட்டல் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த மேலும் 2 பேரை பிடித்தனர்.

  பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தொடர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், லால்குடியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 25), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முருகன் (24), கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்டீபன் (35), மதுரையை சேர்ந்த அஜிம்கான் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேர் மீதும் சங்கிலி பறிப்பு, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

  இதில் திருச்சி கே.கே.நகரில் நடந்த ஒரு குற்ற வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முருகன் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவருடன் அதே சிறையில் அஜிம்கான், ஸ்டீபன், ஸ்ரீராம் ஆகியோரும் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையில் இவர்கள் 4 பேரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பழகி வந்துள்ளனர்.

  சில நாட்களுக்கு முன்பு 4 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்து திருச்சியில் சந்தித்துள்ளனர். அதன்பிறகு இவர்கள் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி, வழிப்பறி மற்றும் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, இரும்புராடு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  ×