search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை முயற்சி வழக்கு"

    • சீனிவாசன், மது ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
    • இருவர் மீதும் தளி போலீசில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே ஆனேக்கல் சங்கரனார் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது35). பெங்களூரு கொத்தநாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மது (36). இவர்கள் இருவர் மீதும் தளி போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

    இந்த வழக்கில் கடந்த 2015 நவம்பர் 5ம் தேதி, இருவரும் ஜாமீன் பெற்றனர். அதன் பிறகு வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை.

    இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நீதி மன்ற தலைமை எழுத்தர் செல்வராஜ், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சீனிவாசன், மது ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    அதே போல், தளி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (46). பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் அருகே, ஹூப்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய குமார் (40).

    இருவர் மீதும் தளி போலீசில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் 2002 ஆகஸ்ட் 26-ம் தேதி, இருவரும் ஜாமீன் பெற்றனர்.

    பின்னர், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் நாராயணசாமி, விஜயகுமார் மீதும் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.

    • லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.
    • லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    லட்சத்தீவு எம்.பி.யாக இருப்பவர் முகமது பைசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது இவருக்கும், லட்சத்தீவு முன்னாள் எம்.பி.யும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சாலே என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது முகமது பைசல், அவரது சகோதரர்கள் மற்றும் சிலர் முகமதுசலேவை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த முகமது சலே விமானம் மூலம் கொச்சி கொண்டு செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து முகமது பைசல், அவரது சகோதரர்கள் உள்பட சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி. முகமது பைசலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த முகமது பைசல் "அரசியல் உள் நோக்கத்துக்காக தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வேன்" என்றார்.

    இந்தநிலையில் கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதை பாராளுமன்ற மக்களவை செயலகம் தெரிவித்தது.

    • முன்னாள் மத்திய மந்திரி சையீத்தின் உறவினரை தாக்கியதாக புகார் எழுந்தது.
    • கேரளாவின் கவரட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது

    திருவனந்தபுரம்:

    கேரளாவையொட்டியுள்ள லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முகமது பைசல். இவர் லட்சத்தீவு தொகுதியின் எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நடந்த மோதலில் இவர் முன்னாள் மத்திய மந்திரி சையீத்தின் உறவினரை தாக்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முகமது பைசல் மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான விசாரணை கேரளாவின் கவரட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, லட்சத்தீவு தொகுதியின் எம்.பி.யும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான முகமது பைசல் மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 4 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். 

    • குண்டர் சட்டத்தில் கைது
    • பாளை. ஜெயிலில் அடைப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கஞ்சா, குட்கா வழக்கில் கைது செய்யப்படுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். தொடர்ந்து குற்ற செயல்களை ஈடுபடுப வர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது.

    இந்த நிலையில் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி லீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் சிங் (வயது 21), வட்டகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ் (27) இவரையும் அஞ்சுகிராமம் போலீசார் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைத்திருந்தனர்.

    இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து ராபர்ட் சிங், பெலிக்ஸ் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து ராபர்ட் சிங், பெலிக்ஸ் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். நாகர்கோவில் ஜெயிலில் இருந்த இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்ட னர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

    ×