search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உப்பு உற்பத்தி
    X
    உப்பு உற்பத்தி

    வேதாரண்யத்தில் மழை இல்லாததால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு

    வேதாரண்யத்தில் கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு கடந்த 7 மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் தொடர்ந்து உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடாகாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கஜா புயல் பாதிப்பிற்கு பிறகு கடந்த 7 மாதங்களாக மழை இல்லாத காரணத்தால் தொடர்ந்து உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டு சராசரி உற்பத்தியான 6 லட்சம் டன்னிலிருந்து 8 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுவதால் உப்பு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் டன் ரூ 600-க்கு விற்ற உப்பு தற்போது டன் ரூ.500-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் உப்பு உற்பத்தி அதிகமாகி மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×