என் மலர்
ஈரோடு
பவானி சாகர் அணைக்கு இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 500 கன அடியாக வந்த தண்ணீர் இன்று அதிகரித்து வினாடிக்கு 1266 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பரவலாக மழை பெய்து வருவதையொட்டி இந்த நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் வரும் 3-ந்தேதி தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. கொங்குநாடு மக்கள் கட்சி சார்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்த உள்ளோம்.
அதேபோன்று தி.மு.க. சார்பில் தி.மு.க.இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு வந்து தீரன் சின்னமலை நினைவு நாளில் பங்கேற்கிறார். தற்போது அவர் வேலூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது விவசாயிகளை பாதிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எரிவாயு குழாய் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டேன் என்றார்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர மாட்டேன் என்றார். ஆனால் தற்போது உள்ள அ.தி.மு.க. அரசு பாரதிய ஜனதா அரசை எதிர்க்க துணிவில்லாமல் உள்ளது.
உயர் மின் கோபுர திட்டத்தை விவசாயிகள் பாதிக்காத வகையில் கேபிள் மூலம் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக இருந்த 37 எம்.பி.க்களை விட தற்போது உள்ள தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சியின் கருத்தை கேட்க வேண்டும். முத்தலாக் மசோதா சட்டத்தை ஒரு சிலர் எதிர்க்கிறார்கள் ஒரு சிலர் ஆதரிக்கிறார்கள் எனினும் இந்த சட்டம் பெண்களைப் பொறுத்தவரை பயனளிப்பதாக இருக்கும்.
கொமதேக பொறுத்தவரை எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி. அவர்களின் நலனுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இன்னும் தேவைப்பட்டால் போராட தயாராக இருக்கிறோம். விவசாய மக்கள் மற்றவர்களைப் போல் சரிசமமாக வாழ வேண்டும் என்பதே எங்களது நோக்கம். கொ.ம.தே.க பொறுத்தவரை நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை தற்போது நாங்கள் தொடங்கியுள்ளோம். ஈரோடு மாவட்டத்திலும் இந்த பணிகளை நாங்கள் விரைவில் தொடங்க உள்ளோம்.
ஈரோடு மாநகர் பகுதியில் தற்போது பல்வேறு சாலைகள் தோண்டப்படுகின்றன. சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் அவை மூடப்படுகிறது. பின்னர் மீண்டும் அவை தோண்டப்படுகிறது ஏன்? என்று தெரியவில்லை.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக அரசு தயங்குகிறது. இதனால் மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய பல ஆயிரம் கோடி வராமல் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு நடத்த வேண்டும். தேர்தலை நடத்த தயக்கம் காட்டுவது ஏன்? உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த நசியனூரில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி அருகிலேயே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வாரச் சந்தை வளாகத்தில் குப்பை கழிவுகளை பிராய்லர் மூலம் வைத்து எரித்து வந்துள்ளனர். இதனால் ஏற்படும் புகைபள்ளி வளாகத்திற்குள் சென்று பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மூச்சு விடுவதில் சிரமம் பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த பெற்றோர்கள் இந்தப் பகுதிகளில் குப்பைகளை எரிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நசியனூர் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .
மேலும் மனசின் ஒரு பேரூராட்சி செயல் அலுவலர் துரை மணியும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இந்த பகுதியில் குப்பை கழிவுகளை எரிப்பதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டினர் எனவே இந்த பகுதியில் குப்பைகளை எரிக்க கூடாது என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த செயல் அலுவலர் “தற்போது தற்காலிகமாக இந்தப் பகுதியில் குப்பைகளை எரிக்க விடமாட்டோம். இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்“ என்றார்.
இதனை ஏற்று பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 45 நிமிடம் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
தென்னக திரிவேணி சங்கமம் என அழைக்கப்படும் மூன்று நதிகள் (காவிரி, பவானி, அமுதநதி) சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை 4 மணிக்கே பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடி விட்டு படி துறையில் அமர்ந்து இறந்த தங்களின் முன்னோர்களை வழிபட்டனர்.
மறைந்த தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களை நினைத்து அவர்களுக்கு பிடித்த பொருட்களை படைத்து வணங்கினர். பூஜையில் வைத்த பொருட்களை ஒரே பிண்டமாக பிடித்து அதை காவிரி ஆற்றில் கரைத்து வழிபட்டனர். பவானி மற்றும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் ஆற்றில் ஓரளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று விடாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் பரிசலில் ரோந்து சுற்றிய வண்ணம் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வாகனங் கள் மூலம் பவானி கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
இப்படி ஆடி அமாவாசை அன்று அவர்களை வணங்குவதன் மூலம் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
பவானியில் கூடு துறைக்கு இன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்ததையொட்டி பவானி நகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது.
இதேபோல் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒருங்கே அமைந்து காவிரி ஆற்றங்கரையோரம் அருள்பாலிக்கும் கொடுமுடி காவிரி ஆற்றிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர். பிறகு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கொடுமுடி காவிரி ஆற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஆற்றில் சிக்கி விடாமல் இருக்க தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒலி பெருக்கி மூலம் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவித்தனர்.
இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரமும் பக்தர்கள் பலர் குவிந்தனர்.
காவிரி ஆற்றங் கரையோரம் வரிசையாக குடும்பம் குடும்பமாக அமர்ந்து தங்களின் முன்னோர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் பிடித்தமான பொருட்களை படைத்து வழிபட்டனர்.
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.
ஈரோடு புதிய மேம்பாலத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கால் டாக்சி ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி ஈ.வி.என். ரோட்டில் வேகமாக சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டாக்சி தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
இதில் அந்த பகுதியில் தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு வேகமாக சென்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சூரம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அந்த கால் டாக்சியை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். சென்னிமலை ரோடு ரெயில்வே கேட் அருகே வந்த போது அந்த கால்டாக்சியை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த கால் டாக்சியை அரசு தலைமை மருத்துவமனை போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த ரங்கம் பாளையத்தைச் சேர்ந்த தீபக் குமார் என்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த மேட்டூரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 30). திருமணம் ஆகவில்லை. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் வேலை பார்த்த கடை எதிரே சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகே நண்பர்களுடன் ஜெகதீஷ் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் ஜெகதீஷ் பிணமாக கிடந்தார். அவரது மர்ம உறுப்பை கல்லால் தாக்கிச நசுக்கி உள்ளனர். இதில் ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.
அவரை இப்படி கொடூரமாக கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்று உடனடியாக தெரியவில்லை.
ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இடத்தில் கூட்டம் கூடியது. அவரது உறவினர்கள் திரண்டனர். சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.
அவரது உடலை எடுக்க முயன்றபோது உறவினர்கள் திரண்டு உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். கொலையாளியை கண்டுபிடித்து அவர்களை கைது செய்த பிறகே உடலை எடுக்க வேண்டும் என கூறினர். மேலும் சத்தி-கோலை மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். கொலையாளியை விசாரணை செய்து விரைவில் பிடித்து கைது செய்வோம் என்று கூறினர்.
இதையொட்டி அவர்கள் கலைந்து சென்றாலும் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலமும் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்வி கொள்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம்-புதுப்பித்தல் கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது. மின்சார வாகனத்தை வாங்குவதை அரசு நிர்பந்திப்பதற்காகவே இந்த முறையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஒதுக்கிய நிதியில் கல்வி, சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடந்த 2017-18ல் ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தாததால் 28ஆயிரம் கோடி ரூபாய் திரும்பியுள்ளது. இது அரசின் நிர்வாக திறமையில்லாததை காட்டுகிறது.
வேலூரில் 3-ம் தேதி மதசார்பற்ற கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியை பிரச்சாரத்திற்கு அக்கட்சியினர் அழைக்கவில்லை. ஏன் அழைக்கவில்லை?

சேலம்-சென்னை 8வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பதால் அத்திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம். 100நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை பாதுகாக்கும் வகையில் நாகையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆணவ படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை உடனடியாக தடுக்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்படும்.
ஆகஸ்ட் 14,15,16 ம் தேதிகளில் தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சேலம் உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே மேலப்பாளையம் சரவணா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 53) சலவைத் தொழிலாளி.
இவருக்கு பூபதி (வயது 30), கார்த்தி (வயது 25) மற்றும் செந்தில் குமார் (வயது 20) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் செந்தில்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செந்தில் குமார் தனது தந்தைக்கு உதவியாக சலவைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில், செந்தில்குமார் நேற்று இரவு வெள்ளோடு ரோட்டில் சென்னிமலையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது குமராபுரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பொக்லைன் இயந்திரம் செந்தில் குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செந்தில்குமார் இறந்தார்.
தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் பாசூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் ஹரிகிருஷ்ணன்(வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டம் ஆண்டு படித்து வந்தார்.
ஆனால், படிப்பு சரிவர வராததால், அதே கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு சேர்ந்து படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரி படிப்பு வராத மனவேதனையில் இருந்த ஹரிகிருஷ்ணன் கடந்த 25-ந் தேதி வீட்டில் இருந்தாராம். எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு ஹரி கிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இதைத்தொடர்ந்து சிவக்குமாரை இளைஞர்கள் நேற்று முன்தினம் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு நேற்று அவர் ராசிபுரத்தில் உள்ள அணைக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அட்சயம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் கூறியதாவது:-
மீட்கப்பட்ட சிவக்குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவருக்கு குழந்தை இல்லை. திருமணமான 3 ஆண்டுகளில் அவருடைய மனைவி பிரிந்து சென்று, வேறு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் சிவக்குமார் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அவரால் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை.
அதன்பிறகு மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகினார். வாரிசு அடிப்படையில் கிடைத்த அரசு வேலையையும் அவரால் செய்ய முடியவில்லை. ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் ஈரோடு பஸ் நிலையத்தில் அவரை மீட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட கார்த்திக் (30) என்பவரை அட்சயம் அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்று காலை மீட்டனர். அவரை குளிப்பாட்டி புதிய துணிகள் வாங்கி கொடுத்து அணிவித்தனர். அப்போது அவர்களுடன் கார்த்திக் ஒத்துழைக்கவில்லை. அவர் கடித்ததில் இளைஞர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இருந்தாலும், பொதுமக்கள் உதவியுடன் கார்த்திக்கை அவர்கள் மீட்டு ராசிபுரம் அணைக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.
ஈரேடு மாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டர் கரட்டுப்பாளையத்தில் மேல் நிலைகுடிநீர் தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இதில் ஆற்றுக்குடிநீர் தொட்டிக்கு ஏற்றம் செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.
தற்போது வழங்கப்படும் ஆழ்துளை கிணறு மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுவருவதாகவும் கூறி இதை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இது நிறைவேற்றப்படாததால் ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலிக்குடங்களுடன் கோபி - நம்பியூர் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் கோபி - நம்பியூர் ரோட்டில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் நடத்திய மக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதியும் நேரில் வந்து காலி குடங்களுடன் மறியல் நடத்திய பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
உங்கள் பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சணையை தீர்த்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.
இதையொட்டி சாலைமறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் காலை 7.50 மணியிலிருந்து 8.50 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது47). இவர் பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து இரண்டு பிளஸ்-1 மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேரில் சென்று புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் புகார் கூறப்பட்ட ஆசிரியர் சக்திவேல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தி மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியர் அறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் இருந்து ஆசிரியர் சக்திவேல் நைசாக வெளியேறிவிட்டார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து ஆசிரியர் சக்திவேல் மலையம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர் மீது நடவடிக்கை வலியுறுத்தி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பவானி மகளிர் போலீசார் ஆசிரியர் சக்திவேல் மீது வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில் ஆசிரியர் சக்திவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்தார். மேலும் அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.






