என் மலர்
செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கோபி அருகே குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோபி:
ஈரேடு மாவட்டம் கோபி அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டர் கரட்டுப்பாளையத்தில் மேல் நிலைகுடிநீர் தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இதில் ஆற்றுக்குடிநீர் தொட்டிக்கு ஏற்றம் செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர்.
தற்போது வழங்கப்படும் ஆழ்துளை கிணறு மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுவருவதாகவும் கூறி இதை சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இது நிறைவேற்றப்படாததால் ஒட்டர் கரட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலிக்குடங்களுடன் கோபி - நம்பியூர் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் கோபி - நம்பியூர் ரோட்டில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் நடத்திய மக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதியும் நேரில் வந்து காலி குடங்களுடன் மறியல் நடத்திய பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
உங்கள் பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சணையை தீர்த்து சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.
இதையொட்டி சாலைமறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் காலை 7.50 மணியிலிருந்து 8.50 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.

Next Story