என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.
    • விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செடி-கொடிகள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து கருகி வருகிறது. மேலும் ஒரு சில தனியார் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் அவ்வப்போது தீபிடித்து எரிந்து வருவதும் பின்னர் அணைவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் இன்று பூம்பாறை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பிரதான மலைச்சாலை ஓரங்களிலும் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீ வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மலைச்சாலையை ஒட்டி சாலையை கடக்கும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் பெரும்பாலும் விவசாய நிலங்களுக்கு அருகே காய்ந்த பயன்பாடற்ற நிலங்களும் உள்ளது. இப்பகுதியில் சருகுகள் அதிக அளவில் குவிந்து கிடப்பதால் அங்கு வன விலங்குகள் தங்கி இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளே காய்ந்த சருகுகள் உள்ள பகுதியில் தீ வைத்து பன்றி போன்ற விலங்குகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சருகுகள் எரிந்து பின்னர் மக்கிய பிறகு அந்த இடத்தில் உடனடியாக தாவரங்கள் முளைத்து வருவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதனால் காரணமாகவே விவசாயிகள் தாங்களாகவே தீ வைப்பதால் இதனை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயதகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி தேனி, பங்களாமேடு பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயதகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். மேலும் தேனி, திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க திரளான தொண்டர்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது.

    • சம்பவத்தில் ஈடுபட்ட சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    • பழனி பைபாஸ் பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே 19, 17 வயதுடைய 2 சகோதரிகளை கடந்த வாரம் மோட்டார் பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. தாமரைக்குளம் பகுதியில் சிறுமிகளின் காதலர்கள் முன்பே அவர்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்தனர்.

    2 சிறுமிகளையும் 4 பேர் கற்பழித்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு நாங்கள் அழைக்கும் போதெல்லாம் எங்கள் இடத்துக்கு வர வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் எனவும் மிரட்டினர்.

    திண்டுக்கல் நகரையே பெரும் பரபரப்பாக்கிய இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    தலைமறைவான ரவுடி பிரசன்னகுமாரை பிடிக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. உதயகுமார் ஆலோசனையின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

    பழனி பைபாஸ் பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பொன்மாந்துரை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் பிரசன்ன குமார் மீது 5 கொலை வழக்குகள், அடிதடி வழக்குகள் உள்ளது. இவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் தேர்தல் சமயத்தில் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும், சம்பவத்தன்று தனது நண்பர்கள் உதவி என கேட்டதால் அவர்களுக்கு தான் பதுங்கி இருக்கும் இடத்தை காட்டியதாகவும் கூறினார்.

    பின்னர் நண்பர்கள் 3 பேரும் சிறுமிகளை பலாத்காரம் செய்ததை பார்த்து தனக்கும் ஆசை வந்ததால் அதில் இறங்கியதாக கூறினார். கொலை, அடிதடி வழக்குகளில் ஈடுபட்டாலும் தனக்கு பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்பதால் விருப்பம் இல்லாமல் இறங்கியதாகவும் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
    • பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதி, தனியார் வருவாய் நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து சருகுகளாக காணப்படுகிறது.

    வெப்பத்தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு அரிய வகை மரங்கள் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன. பழனி சாலையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து குறிஞ்சி நகர் பகுதியில் காட்டுத்தீ பற்றியது. மேலும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

    இந்த நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. வனப்பகுதி வழியாக சென்ற மின் வயரில் காட்டுத்தீ பற்றி சேதமடைந்தன. இதனால் கிளாவரை, பூண்டி, போளூர் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.

    காட்டுத்தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மின் வயர்களை சீரமைக்க முடியாமல் மின் ஊழியர்கள் தவித்தனர். ஓரளவு காட்டுத்தீயின் வேகம் குறைந்த பின்னர் போராடி மின் வயர்களை சீரமைத்தனர். இதனால் மலை கிராமங்களில் பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

    கொடைக்கானலில் இந்த ஆண்டு அதிக அளவு காட்டுத்தீ பற்றி வருகிறது. வனப்பகுதி மட்டுமல்லாது குடியிருப்பு பகுதியிலும் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுத்தீயை கட்டுபடுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைப்பது, நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என வன ஆர்வர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் கொடைக்கானல் வனப்பகுதி பசுமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காட்டுத்தீ ஏற்படும் இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மின் வயர்களை காட்டுத்தீயில் இருந்து பாதுகாக்க உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.
    • கைதான 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். தாய் இல்லாத சூழலில் தந்தை மற்றும் தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இதில் 19 வயது சிறுமிக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் 19 மற்றும் 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சகோதரிகள் 2 பேரும் சாலையின் ஓரம் நின்றிருந்தனர். காதலர்கள் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சிறுமிகளை மிரட்டினர்.

    இதை பார்த்ததும் காதலர்கள் ஓடி வரவே அவர்களை கத்தி முனையில் மிரட்டி தங்களுடன் பைக்கில் வருமாறு கூறினர். பின்னர் அவர்கள் 4 பேரையும் தாமரைக்குளம் என்ற இடத்திற்கு இரவில் தங்க வைத்தனர். பின்னர் தங்கள் கூட்டாளியான மேலும் ஒருவரை அங்கு வரவழைத்தனர்.

    அங்கு காதலர்கள் 2 பேரையும் கட்டி போட்டுவிட்டு 2 சகோதரிகளையும் 4 வாலிபர்கள் மாறிமாறி பலாத்காரம் செய்தனர். இதனை அவர்கள் வீடியோவாகவும் எடுத்துக் கொண்டனர். நாங்கள் எப்போது கூப்பிட்டாலும் நீங்கள் எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

    அதிகாலை வரை தங்கள் காம இச்சையை நிறைவேற்றிய 4 வாலிபர்களும் பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பின் சிறுமிகள் இருவரும் எழுந்து கட்டப்பட்டிருந்த தங்கள் காதலர்களை விடுவித்தனர். பின்னர் இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தனர்.


                                                                            கைதானவர்கள்

     

    போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை பலாத்காரம் செய்த மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார் (வயது 21), முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான சுள்ளான் என்ற பிரசன்னகுமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பிரசன்னகுமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரசன்னகுமார் எப்போதும் செல்போன் பயன்படுத்தமாட்டாராம். தனது நெருக்கமான நண்பர்கள் சிலரின் செல்போன் எண்களை மனப்பாடமாக வைத்திருப்பாராம். அவசர தேவைக்கு மட்டும் யாரிடமாவது செல்போன் வாங்கி பேசுவார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள். வருமானத்திற்காக பல திருட்டு, வழிப்பறியிலும் ஈடுபட்டு வருவது இவர்களின் தொழிலாக உள்ளது.

    கைதான 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளை தவிர மற்ற வீடியோக்களும் இருந்ததால் இவர்கள் இதேபோல வேறு யாரிடமாவது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பெரும்பாலும் வடமாநிலங்களில் மட்டுமே இதுபோல கூட்டு பலாத்காரம், காதலர்களை கட்டிப் போட்டு 4 பேர் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது அதேபோல ஒரு சம்பவம் திண்டுக்கல் அருகே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • கைதானவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் அனைவரும் கடந்த 30-ந்தேதி இடையகோட்டையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றனர். பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பினர்.

    அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சாலையோரம் நின்று கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார் (21), முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (22) ஆகிய 3 பேரும் அந்த சிறுமிகளிடம் எதற்காக இங்கு வந்தீர்கள்? யாருடன் வந்தீர்கள் என கேட்டுள்ளனர். ஓட்டலில் சாப்பிட்ட பில் தொகையை கொடுத்து விட்டு வெளியே வந்த காதலர்கள் அவர்களிடம் தங்களுடன் வந்ததாக கூறியுள்ளனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் சுள்ளான் என்ற பிரசன்னகுமார் (25) என்பவருக்கு போன் செய்து 2 சிறுமிகள் சிக்கியுள்ளனர். அவர்களை அழைத்து வரவா? என கேட்டுள்ளனர். அவரும் சிறுமிகளை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து காதலர்கள் 2 பேரையும் ஒரு பைக்கில் ஏற்றிக் கொண்டு, சிறுமிகள் 2 பேரையும் மற்றொரு பைக்கில் ஏற்றிக் கொண்டு தாமரைக்குளம் பகுதிக்கு வந்துள்ளனர்.

    அங்கு வந்தவுடன் காதலர்கள் இருவரையும் கட்டிப்போட்டனர். அந்த இடத்துக்கு பிரசன்னகுமாரும் வந்து விடவே 4 வாலிபர்களும் சேர்ந்து 2 சிறுமிகளை மாறி மாறி கற்பழித்தனர். இரவு முழுவதும் 4 வாலிபர்களும் தங்கள் இச்சையை தீர்த்துக் கொண்டு அதிகாலை நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர் அவர்கள் 4 பேரும் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தனர். பின்னர் இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சரண்குமார், வினோத்குமார், சூரியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய பிரசன்ன குமாரை தேடி வருகின்றனர். பிரசன்ன குமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் தாலுகா, மேற்கு தாடிக்கொம்பு, வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கைது செய்யப்பட்ட 3 பேரும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • காயமடைந்த அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • விடுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள வார்டன் இங்கு வருவதே கிடையாது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பழனி மற்றும் கொடைக்கானல் மலை கிராமங்களைச் சேர்ந்த 24 மாணவிகள் தங்கி இங்குள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்ட விடுதி பல்வேறு இடங்களில் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசலுடன் காணப்பட்டது.

    இன்று காலை பள்ளி சமையலர் அபிராமி குழந்தைகளுக்காக உணவு தயாரித்து விட்டு மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து மாணவிகள் மீது விழுந்தது.

    இதில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த மாணவிகள் நளினி, தர்ஷினி, ரெங்கநாயகி, தேவி மற்றும் சமையலர் அபிராமி உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    சத்தம் கேட்டு அருகில் வாரச்சந்தையில் கூடி இருந்த வியாபாரிகள் உள்ளே வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவிகளை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அவர் விடுதியில் இருந்த மற்ற மாணவிகளை பாதுகாப்பு கருதி வேறு ஒரு கட்டிடத்துக்கு அனுப்பி வைத்தார். பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் உடனடியாக மாணவிகள் மீட்கப்பட்டு விட்டனர். இரவு நேரமாக இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

    மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த விடுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள வார்டன் இங்கு வருவதே கிடையாது. பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்தான் அதிகாரிகளும் வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் இது போன்ற அரசு விடுதியில் தங்கி இருந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அவர்களின் நலன் கருதி இந்த கட்டிடத்தை பூட்டி விட்டு மாணவிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றனர்.

    • கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் நீரோடைகளில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தின் காரணமாக வனப்பகுதி மட்டுமின்றி, புதர்கள், செடி கொடிகள் உள்ளிட்டவை கருகி காணப்படுகிறது.

    வெயிலின் தாக்கம் தொடர்வதால் நீர் நிலைகளும் வறண்டு வருகிறது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச் சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகளும் வறண்டு காணப்படுவதால் இதனை காண வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்த அருவிப்பகுதிகளில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் தண்ணீர் குறைவாக செல்வதால் விவசாயமும் பாதிப்பு அடைய தொடங்கி உள்ளது. மேலும் மலைக் காய்கறிகளில் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் நீரோடைகளில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

    இதேபோல் வனப்பகுதியிலும் தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள், பறவைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுவதால் பாதிப்பு உண்டாகிறது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    • அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார்.
    • பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கொடைக்கானலில் நடிகை ரோகினி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக மக்கள் நலனுக்காக தி.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம் ஆகியவை காலம் கடந்தும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். இது போன்ற திட்டங்கள் தமிழகத்தை கடந்தும் பல்வேறு மாநிலங்களில் போற்றப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு சமூக நீதி திட்டங்களால் பெண் கல்வி உயர்ந்து வருகிறது. பழங்குடியின பெண் என்பதால் குடியரசு தலைவருக்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறது. நாடாளுமன்ற திறப்பு விழாவில் அவருக்கு அழைப்பு இல்லை. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது அவரை நிற்க வைத்து பிரதமர் மோடி அமர்ந்தபடி உள்ளார். இதுதான் அவர்கள் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை.

    கோவிலின் கருவறைக்குள் கூட பெண்கள் வரக்கூடாது. கோவிலை நாங்கள்தான் திறப்போம் என்று பா.ஜ.க. கூறுவது எந்த விதத்தில் நியாயம். மல்யுத்த வீரர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் போது நம் நாட்டுக்காக பதக்கம் பெற்றுத் தந்த வீரர், வீராங்கனைகள் நடுரோட்டில் போராட்டம் நடத்தினர்.

    ஆனால் அவர்களது கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை. பா.ஜ.க. அரசின் அடக்குமுறைகளை வெளிக் கொண்டு வருபவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல மருந்து நிறுவனங்கள் மீது புகார் எழுந்த நிலையில் தரச்சான்று வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது பா.ஜ.க. அரசுக்கு ரூ.பல கோடி மதிப்பில் அந்த நிறுவனம் தேர்தல் பத்திரம் வாங்கியதால் அந்த நிறுவனத்துக்கு உடனடியாக தரச்சான்று வழங்கப்பட்டது. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகள் போல் நடத்தியது மத்திய பா.ஜ.க. அரசு. எனவே இது போன்ற அரசை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை தமிழகம் முழுவதும் வெற்றிபெற வைப்பதன் மூலம் நாம் மத்திய அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 3 வீடுகளில் நடந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரெயில் நிலையம் செல்லும் சாலையில் அதிகமான வங்கிகள் மற்றும் தனியார் பள்ளி, அரசு பள்ளிகள் உள்ளன. மேலும் வடமதுரை போலீஸ் நிலையம், யூனியன் அலுவலகம் ஆகியவையும் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் வந்துசெல்வதால் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை, பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவை திருடுபோனது. 2 வீட்டில் கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு தெரிய வில்லை. இப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது50) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மேலும் அருகில் இருந்த வீட்டில் மோட்டார் சைக்கிளையும் எடுத்து சென்றனர். மற்றொரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது வீட்டில் இருந்தவர்கள் எழுந்துவிடவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

    போலீஸ் நிலையம் அருகிலேயே அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் பொன்னுச்சாமி புகார் அளித்தார்.
    • ராஜ்குமாரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எத்திலோடு ஊராட்சி மன்ற அலுவலகம் எத்திலோடு கிராமத்தில் உள்ளது. இந்த ஊராட்சியின் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த ஷகிலா.

    இவரது கணவர் ராஜ்குமார் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமியை வெளியே வரும்படி கூறினார். அவர் எதற்காக தன்னை வெளியே வரச்சொல்கிறீர்கள் என கேட்டதற்கு தான் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட போகிறேன் என்றார்.

    இதற்கு பொன்னுச்சாமி, ராஜகுமாரிடம் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என கூறினார். இருந்தபோதும் ராஜ்குமார் ஊராட்சி செயலாளரை அலுவலகத்தை விட்டு வெளியே வரச் சொல்லி அனுப்பிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பூட்டினார்.

    இது குறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாவிடம் பொன்னுச்சாமி புகார் அளித்தார். அதன்பேரில் ராஜ்குமாரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே.
    • இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    திண்டுக்கல்:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே. மக்களை வைத்து பிழைப்பதற்காக இல்லை.

    சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் கொடுத்த சின்னத்துடன் களத்தில் நிற்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா பெரிய கட்சி என்கின்றனர். ஆனால் தனித்து நிற்க பயப்படுகின்றனர். காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. 10 சீட் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது.

    கச்சத்தீவை மீட்காமல் 10 ஆண்டுகளாக கோமாவில் இருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரஉள்ள நிலையில் இதுபற்றி பா.ஜ.க. பேசி வருகிறது. நான் 13 ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி பேசி வருகிறேன். 6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு இது குறித்து கடிதம் எழுதினேன்.

    தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் நானும் எனது கட்சியினரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கிறோம்.

    பா.ஜ.க.வினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைத்திருந்ததால்தான் டி.டி.வி.தினகரனுக்கும், வாசனுக்கும் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்துள்ளது. தினகரனையும், சசிகலாவையும் சிறைக்கு அனுப்பிய பா.ஜ.க.வுடன் இன்று கூட்டணி வைத்துள்ளனர். இரட்டை இலையை மீட்பதே லட்சியம் என்று கூறி வரும் தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் உள்ளார்.

    அன்று முதல் இன்று வரை இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவர் நான் மட்டுமே. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவான காங்கிரஸ், தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பா.ஜ.க.வுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது எங்களுக்கு எதிர்கட்சிதான். தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்சி அலுவலமாக மாறி விட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னர் போலவும், அவரது அமைச்சர்கள் குறுநில மன்னர்கள் போலவும் செயல்பட்டு வருகின்றனர். உதயநிதி தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் செங்கல், புகைப்படம் என்று காமெடி பிராப்பர்ட்டி செய்து வருகிறார். இது மக்களிடம் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இன்று திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மாலையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    ×