search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வறண்டு வரும் நீர்வீழ்ச்சிகள்
    X

    கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வறண்டு வரும் நீர்வீழ்ச்சிகள்

    • கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் நீரோடைகளில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தின் காரணமாக வனப்பகுதி மட்டுமின்றி, புதர்கள், செடி கொடிகள் உள்ளிட்டவை கருகி காணப்படுகிறது.

    வெயிலின் தாக்கம் தொடர்வதால் நீர் நிலைகளும் வறண்டு வருகிறது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, கரடிச் சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நீர்வீழ்ச்சிகளும் வறண்டு காணப்படுவதால் இதனை காண வரும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்த அருவிப்பகுதிகளில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் தண்ணீர் குறைவாக செல்வதால் விவசாயமும் பாதிப்பு அடைய தொடங்கி உள்ளது. மேலும் மலைக் காய்கறிகளில் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் அருவிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும் நீரோடைகளில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுவது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

    இதேபோல் வனப்பகுதியிலும் தண்ணீர் இல்லாததால் வன விலங்குகள், பறவைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுவதால் பாதிப்பு உண்டாகிறது. எனவே வனப்பகுதியில் உள்ள விலங்குகள், பறவைகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×