என் மலர்tooltip icon

    கடலூர்

    புவனகிரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் தபால் ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் பாலசந்தர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 35). இவர் புவனகிரியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ராஜேஸ்வரியை மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
    கடலூரில் கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பட்டம்மாள்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). தனியார் பள்ளி வேனில் கிளீனராக இருந்து வந்தார். இவருடைய மனைவி தேவகி (33). திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களது பக்கத்து தெருவான உப்பலவாடி தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (30). வெல்டர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சசிக்குமாருக்கும், தேவகிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    இதை அறிந்த ஆறுமுகம் 2 பேரையும் கண்டித்தார். இதனால் தங்களின் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் ஆறுமுகத்தை கொலை செய்ய 2 பேரும் திட்டம் தீட்டினர். கடந்த 5-6-2015 அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஆறுமுகத்துக்கு டீயில் தூக்க மாத்திரைகளை கலந்து தேவகி கொடுத்தார்.

    அதை குடித்ததும் ஆறுமுகம் அயர்ந்து தூங்கினார். இதையடுத்து இரவு 11 மணிக்கு தேவகி தனது கள்ளக்காதலன் சசிக்குமாரை வரவழைத்தார். தூங்கி கொண்டிருந்த ஆறுமுகத்தை, தேவகியும், சசிக்குமாரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகி, சசிக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி திலகவதி தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட தேவகி மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அதைத்தொடர்ந்து சசிக்குமார் கடலூர் மத்திய சிறையிலும், தேவகி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி வாதாடினார்.
    காட்டுமன்னார்கோவில் அருகே ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது பழஞ்சநல்லூர். இங்கு காளியம்மன், செல்லியம்மன் கோவில்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரி பூஜை முடிந்ததும் இரவு கதவுகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    கோவிலின் நிர்வாகி பாண்டியன் என்பவர் நேற்று காலை கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது செல்லியம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் வெள்ளி வேல், வெள்ளி பிரம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் திருடப்பட்டிருந்தது. மேலும் கோவில் முன்புள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    அதுபோல் அருகில் உள்ள காளியம்மன்கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க செயின் திருடு போய் இருந்தது. கோவில் முன்பு இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மொத்தம் இந்த 2 கோவில்களிலும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளைபோய் இருந்தது.

    இந்த துணிகர கொள்ளைசம்பவம் குறித்து பாண்டியன் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நகை, பணம் கொள்ளைபோன 2 கோவில்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் நகை-பணம் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூரில் இன்று தமிழிசை சவுந்தரராஜன் உருவப்படம் மற்றும் பாரதீய ஜனதா கொடியை விடுதலை சிறுத்தை கட்சியினர் எரித்து கோஷமிட்டனர்.

    கடலூர்:

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்ததை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இன்று கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரதீய ஜனதா கட்சி கொடி மற்றும் தமிழிசை சவுந்தரராஜனின் உருப்படத்தை எரித்து கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    டான்பாக் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கூலிதொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்த ஊழியர்களிடம் தாசில்தார் விசாரணை நடத்தினார்.

    கடலூர்:

    கடலூர் சிப்காட் வளாகத்தில் டான்பாக் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடலூர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 50) என்பவர் கூலி வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு அவர் வேலைக்கு சென்றார். நள்ளிரவு திடீரென்று நாகராஜ் மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரில் நாகராஜ் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்கள்.

    இதையொட்டி கடலூர் தாசில்தார் பாலமுருகன், டான்பாக்தொழிற் சாலைக்கு நேரில் சென்றார். நாகராஜ் சாவு தொடர்பாக அங்கு இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.

    மேலும் நாகராஜ் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.

    அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் எம்.சி. சம்பத்தை நீக்க வேண்டும் என்று சத்தியா எம்.எல்.ஏ. கூறினார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் எம்.பி.க்கள் அருண் மொழிதேவன், சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பாண்டியன் (சிதம்பரம்), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), கலைச்செல்வன் (விருத்தா சலம்) ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்கள்.

    அமைச்சர் சம்பத் எங்களை மதிப்பதில்லை என்றும், தொகுதிக்கு அரசு நலத்திட்டங்கள் வரவிடாமல் தடுக்கிறார் என்றும் புகார் கூறினர். அமைச்சர் சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையொட்டி அமைச்சர் சம்பத்திடம் இருந்து கனிமவளத்துறை, பறிக்கப்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கூடுதலாக அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

    அமைச்சர் சம்பத் தற்போது தொழிற்துறை அமைச்சராக இருந்து வருகிறார். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து பிரிந்து டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்து விட்டார்.

    தொடர்ந்து எம்.சி. சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்யாபன்னீர்செல்வம், பாண்டியன், முருகு மாறன் ஆகியோர் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    இதுதொடர்பாக சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சரியாக மதிப்பதில்லை. தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றவிடாமல் தடுக்கிறார்.

    எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்களை அமைச்சர் சி.வி.சண்முகம் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவியது.

    இதுதொடர்பாக சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களை அவர் நிறைவேற்றி வருகிறார். அந்த திட்டங்களை செயல்பட விடாமல் அமைச்சர் எம்.சி.சம்பத் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் அரசுக்கும், எங்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், மக்களுக்கு திட்டங்கள் சென்றடைவதற்காகவும் நாங்கள் எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிகிறோம்.

    எங்கள் சுயநலத்திற்காக நாங்கள் பேசவில்லை. மக்களுக்காக தான் கோரிக்கை வைக்கிறோம். அமைச்சர் எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட கழக செயலாளர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்- எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக பேசி முடிவு செய்துள்ளோம்.

    எனவே சமரச பேச்சுக்கு இடம் இல்லை. யாரும் எங்களிடம் சமரசம் பேசவில்லை. அமைச்சர் எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.அருண் மொழிதேவன் தற்போது டெல்லியில் இருக்கிறார். இந்த பிரச்சினை தொடர்பாக அவர் எங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் சென்னை வந்ததும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்போம்.

    அமைச்சர் பதவியில் இருந்து எம்.சி.சம்பத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் அருகே தந்தை மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அக்காள்- தங்கை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது45). விவசாயி. இவரது மனைவி முருகம்மா. இவர்களுக்கு திவ்யா (22), தீபிகா(18), திரேஷா (15) ஆகிய 3 மகள்கள் இருந்தனர்.

    திரேஷா தூக்காணாம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். கணேசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அவர் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார்.

    நேற்று இரவும் கணேசன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்தார். இதனால் முருகம்மா மற்றும் அவரது மகள்கள் மனவேதனை அடைந்தனர். பின்னர் அனைவரும் படுத்து தூங்கினர். நள்ளிரவு 2 மணி அளவில் திரேஷா எழுந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    காலையில் எழுந்த கணேசன் மகள் திரேஷா வி‌ஷம் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திரேஷாவை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் திரேஷா பரிதாபமாக இறந்தார்.

    தனது தங்கை வி‌ஷம் குடித்து இறந்ததால் அக்கா திவ்யா மனவேதனை அடைந்தார். பின்னர் அவரும் வி‌ஷத்தை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் திவ்யா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்காள்- தங்கை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அமைச்சர் எம்.சி. சம்பத்தை நீக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் எம்.பி.க்கள் அருண் மொழிதேவன், சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சத்தியா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), பாண்டியன் (சிதம்பரம்), முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில்), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்கள்.

    அமைச்சர் சம்பத் எங்களை மதிப்பதில்லை என்றும், தொகுதிக்கு அரசு நலத்திட்டங்கள் வரவிடாமல் தடுக்கிறார் என்றும் புகார் கூறினர். அமைச்சர் சம்பத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையொட்டி அமைச்சர் சம்பத்திடம் இருந்து கனிமவளத்துறை, பறிக்கப்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கூடுதலாக அந்த பொறுப்பு வழங்கப்பட்டது.

    அமைச்சர் சம்பத் தற்போது தொழிற்துறை அமைச்சராக இருந்து வருகிறார். கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்து பிரிந்து டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்து விட்டார்.

    தொடர்ந்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் சத்யாபன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன் ஆகியோர் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    இதுதொடர்பாக சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    புரட்சி தலைவி அம்மா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

    கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சரியாக மதிப்பதில்லை. தொகுதியில் திட்டங்கள் நிறைவேற்றவிடாமல் தடுக்கிறார்.

    எனவே அவரை அமைச்சர் பதவியில் இருந்தும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். கடலூர் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி தேவையில்லை. விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பண்ருட்டி தொகுதிக்கு திட்டங்கள் வரவிடாமல் அமைச்சர் எம்.சி.சம்பத் தடுக்கிறார் என சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    பண்ருட்டி:

    கடலூரில் வெள்ளச் சேதம் ஏற்படாமல் தடுக்க அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கடலூர் மாவட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

    இதுகுறித்து பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பண்ருட்டி தொகுதியில் நீண்ட நெடுங்காலமாக கலை மற்றும் அறிவியியல்கல்லூரி அமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த கல்வி ஆண்டில் அதற்கான அறிவிப்பு வர இருந்தது. இந்த நிலையில் உள்ளூர் அமைச்சராக இருக்கும் எம்.சி.சம்பத் பண்ருட்டி தொகுதிக்குகல்லூரி வரவிடாமல் தடுத்து விட்டார்.

    இதே போல பண்ருட்டி தொகுதியில் பெருகி வரும் போக்குவரத்தை சரி செய்ய கண்டரக்கோட்டை பெண்ணையாற்றங் கரையில் இருந்து கடலூர் வரை உள்ள கஸ்டம்ஸ் சாலையை அமைக்க ரூ.200 கோடி கேட்டு பெறப்பட்டது. அதற்கு இது நாள் வரைமுறையான டெண்டர் வைக்க விடாமல் அமைச்சர் எம்.சி.சம்பத் தடுத்து வருகிறார்.

    இதேபோல் பண்ருட்டி சென்னை சாலையில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியிணை அதிகாரிகளிடம் பேசிவேகமாக முடுக்கி விடாமல் தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு தொகுதி மக்களிடம் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காக முடக்கி போட்டுள்ளார்.

    மேலும் 66 கிராம மக்களின் வாழ்வாதாரமாக திகழும் மலட்டாறை தூர்வார தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தராமல் தடுத்து வருகிறார்.

    தொடர்ந்து இது போன்று பல நல்ல திட்டப்பணிகள் தொகுதிக்கு கிடைக்கவிடாமல் செய்து வருகிறார்.

    மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ க்கள், எம்.பி.க்கள் இவரது செயல்பாட்டால் கவலையடைந்துள்ளனர்.

    அரசு அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வருகிறார். அமைச்சரின் போக்கு தொகுதி மக்களிடம் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.

    எனவே இவரது செயலை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.மற்றும் எம்.பி.க்கள் இவரது நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறோம். சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்கும் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் நடவடிக்கைகளை கண்டித்து தொடர்ந்து அமைச்சரின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சத்திரம் அருகே எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடும் போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் காயம் அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர்கள், குண்டியமல்லூருக்கு ஒரு வேனில் நேற்று சென்றனர். அங்கு உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வேனில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

    புதுச்சத்திரம் அருகே உள்ள ஆயித்துறை என்ற இடத்தில் பெருமாள் ஏரிக்கரையில் வேன் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடும் போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த 35 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கஸ்தூரி, ராணி, அரசம்மாள், சுமதி, சிவகாமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடலூரில் குடும்ப பிரச்சனையில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடலூர்:

    வடலூர் ரோட்டு ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 41). விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி(31). குடும்ப பிரச்சினை காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதில் லட்சுமி கோபம் அடைந்து சீர்காழி அருகே திருவையாறில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கோதண்டராமன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருத்தாசலத்தில் காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    விருத்தாசலம்:

    மதுரை மேலூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ஜாஸ்மின் என்கிற ரேவதி(21). இவர் விருத்தாசலம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் ஜாஸ்மின் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த அவரது தாய் சரஸ்வதி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் ஆகி 1½ வருடத்தில் இளம்பெண் இறந்து விட்டதால் விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷ்ணி சந்திரா இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×