search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் கவிழ்ந்தது"

    • சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் மற்றும் ஆட்டோ மூல மும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து ஒரு வேனில் சென்றனர். நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வேனை வதிஷ்டபுறம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி வந்தார். திட்டக்குடியை அடுத்துள்ள தி.இளமங்கலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுநர் கட்டுப் பாட்டை இழந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 குழந்தை கள் உட்பட 19 பேரும் வேனில்சிக்கினர். சாலையில் சென்றவர்களும் அருகில் இருந்த வர்களும் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மற்றும் ஆட்டோ மூல மும் திட்டக்குடி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த ஜெயந்தி (40), ஐஸ்வர்யா (16) காயத்ரி (24) முத்து (45), வீரம்மாள் (40), மகேஸ்வரி (28), சரிதா (32), பரமேஸ்வரி (22) ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயந்தி, காயத்ரி, வீரம்மாள், மகேஸ்வரி, சரிதா உட்பட 5 பெண்கள் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதி கிராமத் தைச் சேர்ந்த பொது மக்கள் ஏராளமா னோர் மருத்துவ மனையில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அய்யப்ப பக்தர்கள் காயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் திருவண்ணாமலை நோக்கி சென்றனர். வேனை டிரைவர் மற்றும் உரிமையாளர் செந்தில்குமார் என்பவர் ஓட்டினார்.

    எட்டிவாடி ரெயில்வே கேட் அருகே சென்ற போது வேனின் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய வேன் ரோட்டில் கவிழ்ந்தது. முற்றிலும் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த அறிவழகன் (43), சஞ்சய் (33) வாரி (18) ஆகிய 3 பேர் படுகாயமும், உள்பட 16 பேர் லேசான காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக சந்தவாசல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×