என் மலர்
கடலூர்
- பண்ருட்டியில் தந்தை இறந்த துக்கத்திலும் மாணவன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உறவினர்கள், சந்துரு தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு தினகரனின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி கிராமத்தில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்தி கடனுக்காகவும் அலகு குத்தி கொண்டு வீதியுலாவந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தினகரன் (47), திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வரும் தனது ஒரே மகன் சந்துரு இன்று நடக்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக வேண்டிக்கொண்டு நேர்த்தி கடனுக்காக மகனுக்கு அலகு குத்தி அழைத்து வந்தார்.
நேர்த்திக்கடன் முடிந்து மகனுக்கு போடப்பட்ட அலகை கழற்றிவைத்த போது தினகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் மனைவி, மகன் முன்னிலையில் அதே இடத்தில் சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக காரில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். தினகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிர் இழந்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்துரு கதறி அழுதான். இருப்பினும் இன்று 10-ம் வகுப்புதேர்வு நடப்பதால் தான் தேர்வு எழுத செல்ல வேண்டும் என அவர் உறவினர்களிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், சந்துரு தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு தினகரனின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி சந்துருவை உறவினர்கள் இன்று காலை திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவன், தேர்வை எழுதினார். தொடர்ந்து அவருக்கு ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். இன்று மாலை தினகரன் உடல் அடக்கம் நடக்க உள்ளது.
தந்தை இறந்த துக்கத்திலும் மாணவன் தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த கார்கூடல் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கார்கூடல் ஆற்று பகுதியில் மர்ம நபர் திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர் தப்பி ஓடினார். மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்ததில், மணல் திருடிய நபர் கோ.பொன்னேரி பகுதியை சேர்ந்த வீரமணி என்பது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய வீரமணியை தேடி வருகின்றனர்.
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
வடலூர் ரெயில் நிலையம் அருகே இன்று தண்டவாளத்தில் தலையை வைத்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளரின் மகளான நிஷா என்ற பெண், மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதவிருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவந்தார்.
இந்நிலையில், இன்று மாலை பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி ரெயில் வந்தபோது, நிஷா தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீட் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
- இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர்.
- மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரது தலை, கை உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் வெட்டினார்கள்.
கடலூர்:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா. இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 15 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் மானா சந்து அருகே இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
- குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டது.
- தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடந்த 40 நாட்களாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 1 1/2 ஆண்டுகள் ஆகிறது. 8 மாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் கவிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரசவம் பார்த்தனர். அப்போது மகேஸ்வரிக்கு பரிசோதனை செய்ததில் கருவில் 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
இதில் அவருக்கு அழகான 3 ஆண் குழந்தைகள் பிறந்தது. இருப்பினும் குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால், இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் கடந்த 40 நாட்களாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் மூன்று குழந்தைகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதுடன், எடையும் அதிகரித்தது. இதனால் ஆரோக்கியத்துடன் இருக்கும் 3 குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 3 குழந்தைகளையும் மருத்துவ குழுவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்ததால் குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவ குழுவினர் பரிசு வழங்கினர்.
- சாலையில் நடந்து வந்த 17 வயது சிறுமியை திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றார்.
- திருமாவளவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் திருமாவளவன் (வயது 24). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதுடைய மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமாவளவன், தனது நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரங்கராஜ்(24), கடலூர் கோதண்டராமபுரத்தை சேர்ந்த அப்பர்சுந்தரம் மகன் அஜய் (22), செல்லாங்குப்பத்தை சேர்ந்த கண்ணாலன் மகன் சந்தோஷ் (24) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கடலூர் முதுநகருக்கு வந்தார்.
அப்போது சாலையில் நடந்து வந்த 17 வயது சிறுமியை திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றார். இதை அந்த பகுதி மக்கள் பார்த்து, சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன பெற்றோர், இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், அவரை கடத்தியவர்களையும் தேடி வந்தனர். மேலும் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே 4 பேரும் சிறுமியை கடத்திக்கொண்டு கடலூர் எஸ்.பி. அலுவலக சாலையில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த காரை மடக்கி அதில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் திருமாவளவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள்அதிகமாக வந்து செல்வதால் தேவனாம்பட்டினம் கடற்கரையில் அதிக அளவில் குப்பை அதிகரித்து வந்தது.
- இன்று காலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் தூய்மை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்
கடலூர்:-
கடலூரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு நேரில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தை விட அதிக அளவில் குப்பை அதிகரித்து வந்தன.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாஃபர் முன்னிலையிலும் தூய்மை பணியாளர்கள் இன்று காலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் தூய்மை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து பாதுகாப்பாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு கடலூர் வசந்தராயன் பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர். மேலும் ஏற்கனவே விடுமுறை நாட்களிலும் , விழா நாட்களிலும் டன் கணக்கில் குவிந்திருந்த குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின்பேரில் உடனடியாக அகற்றி சுத்தமாக வைத்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
- சிதம்பரம் வண்டிகேட் சந்திப்பில் இன்று காலை சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது
- லாரி டிரைவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
கடலூர்:
சிதம்பரம் வண்டிகேட் சந்திப்பில் இன்று காலை சிதம்பரம்- சீர்காழி புறவழிச் சாலை பணிக்காக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. லாரி டிரைவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்த லாரி டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்குலத் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- அந்த பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு வெகு தூரம் சென்று எடுத்துவரும் சூழல் உள்ளது.
கடலூர்:
குடிதண்ணீர் மற்றும் சாலை வசதி அமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு அளித்து ஆர்ப்பாட்டம். விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்குலத் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால் அந்த பகுதியில், குடிநீர் வசதிக்காக குடிநீர் குழாய் மற்றும் நீர்த்தேக்க தொட்டி ஆகியவை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு வெகு தூரம் சென்று எடுத்துவரும் சூழல் உள்ளது. இது குறித்து கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற தலைவரிடத்திலும் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில் தங்கள் பகுதிக்கு புதிய நீர்தேக்க தொட்டி மற்றும் சாலை வசதி அமைத்து தர கோரி விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கம்மாபுரத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆ ர்ப்பாட்டத்திற்கு பின் விருத்தாசலம் சார் ஆட்சியர் (பொறுப்பு) லூர்து சாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட சார் ஆட்சியர் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி அளிக்கப்படும் என உறுதி அளித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அசோகன், கலைச்செல்வன், நெல்சன், செந்தில், சின்னதம்பி, சத்யா, கவிதா உள்ளிட்ட கம்மாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.அங்குள்ள கருவேலம் மரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு நின்றவரை விசாரணை செய்தனர்.
கடலூர்:
புவனகிரி அடுத்த மருதூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டான் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.அங்குள்ள கருவேலம் மரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு நின்றவரை விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதன் அடிப்படையில் அவரை மருதூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர் புவனகிரி அடுத்த நாலாம் தெத்து கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 43 )என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அய்யப்பன் எம்.எல்.ஏ. நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
- விழாவிற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார்.
கடலூர்:
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டில் 15.50 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை, 3-வது வார்டு செம்மண்டலம் காந்தி நகர் ரூ.14 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், மகேஸ்வரி விஜயகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், லட்சுமி செக்யூரிட்டி கே.ஜி.எஸ்.தினகரன், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோவன், வனிதா சேகர், வார்டு அவைத்தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், நிர்வாகிகள் ராமலிங்கம், தெய்வநாயகம், செல்வராஜ், சம்மந்தம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, மணிகண்டன், சதிஷ், ஆனந்த், பாலசந்தர், செந்தில், மணிவண்ணன், சதாசிவம், சுரேஷ், தண்டபாணி, அருணாச்சலம், சிவகுஞ்சிதம், ஆறுமுகம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார்
- கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது
கடலூர்:
:கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம், மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான அருட் செல்வம், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் படிவங்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடலூர் மாநகராட்சி தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா கூறுகையில்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட தி.மு.க . பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் கடலூர் மாநகர தி.மு.க. சார்பில் 45 வார்டுகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியின் சாதனைகளை குறித்தும், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் கடலூரில் நடைபெற்று வரும் ஏராளமான வளர்ச்சி பணிகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்று வருவதை மக்களிடம் எடுத்துக் கூறி வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கடலூர் மாநகரத்தில் ஒவ்வொரு வார்டுகளிலும் சுமார் 1,500 முதல் 2 ஆயிரம் புதிய உறுப்பினர்கள்






