search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது: கடலூர், விழுப்புரம் கலெக்டர்கள் தேர்வு மையங்களில் ஆய்வு
    X

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது. கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டார். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் உள்ளார்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது: கடலூர், விழுப்புரம் கலெக்டர்கள் தேர்வு மையங்களில் ஆய்வு

    • தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கி வருகிற 20 ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
    • மொத்தம் 868 மாணவர்கள், 393 மாணவிகள் என மொத்தம் 1261 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கி வருகிற 20 ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கடலுார் கல்வி மாவட்டத்தில் 236 பள்ளிகள் மூலம் 10309 மாணவர்கள், 9570 மாணவிகள் மொத்தம் 19779 மாணவர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 209 பள்ளிகள் மூலம் 7965 மாணவர்கள், 6950 மாணவிகள் மொத்தம் 14915 மாணவர்களும் என மொத்தம் 445 பள்ளிகள் மூலம் 18274 மாணவர்கள், 16520 மாணவிகள் மொத்தம் 34794 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இது தவிர தனித்தேர்வர்களாக கடலுார் கல்வி மாவட்டத்தில் 423 மாணவர்கள், 210 மாணவிகளும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 445 மாணவர்கள், 183 மாணவிகள் மொத்தம் 628 மாணவர்களும் என மொத்தம் 868 மாணவர்கள், 393 மாணவிகள் மொத்தம் 1261 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கடலுாரில் 80 மையங்களும், விருத்தாச்சலத்தில் 69 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 தேர்வு மையத்தில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியதை யொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் தேர்வுகள் சரியாக நடைபெறுகிறதா? அனைத்து மாணவர்களுக்கும் கேள்வித்தாள் வழங்கப்பட்டுள்ளதா? அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா? திடீர் மின்தடை ஏற்பட்டால் மாற்று நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி ராமகிருட்டிணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 241 அரசுப் பளளியில் 8652 மாணவர்களும், 9104 மாணவிகளும், அரசு உதவி பெறும் 31 பள்ளிகளை சேர்ந்த 1607 மாணவர்களும் 1449 மாணவிகளும், 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த 2747 மாணவர்களும், 2068 மாணவிகளும் என ஆக மொத்தம் 25627 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 121 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்காக 4 மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 125 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது. மேலும், அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து வசதிகள், முதலுதவி சிகிச்சை போன்றவைகள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×