என் மலர்tooltip icon

    கடலூர்

    • வயிற்று வலியின் காரணமாக கதவை சாத்திவிட்டு வினோதினி படுத்து உறங்கியுள்ளார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோதினி தூக்கில் தொங்கினார்.

    கடலூர்:

    மேல் புவனகிரியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி வினோதினி (வயது 27). இவர்களுக்கு ரோகேஷ் (8), கோகுல் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை கடுமையான வயிற்று வலியின் காரணமாக தன்னுடைய வீட்டில் உள்ள கதவை சாத்திவிட்டு வினோதினி படுத்து உறங்கியுள்ளார். வயிற்று வலி அதிகமானதால், வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கூலி வேலைக்கு சென்ற முருகவேல் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயற்சித்தார். ஆனால், கதவை திறக்க முடியவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களை உதவிக்கு அழைத்த முருகவேல், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோதினி தூக்கில் தொங்கினார்.

    இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வினோதினியை மீட்டு புவனகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த டாக்டர், வினோதினி இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • என்ன காரணத்திற்காக மாநில நிர்வாகி தாக்கப்பட்டு உள்ளார் என்பது முதலில் தெரிய வேண்டும்.
    • குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ரேஷன் கடை தொடர்ந்து மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    கடலூர்:

    சிதம்பரம் லால்கான் தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திர ராஜா (வயது 56). இவர் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருந்து வருகிறார்.

    நேற்று காலை ஜெயச்சந்திரன் ராஜா சிதம்பரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 4 நபர்கள் திடீரென்று வழிமறித்து கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயச்சந்திர ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் ஜெயச்சந்திர ராஜாவை, தாக்கிய சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் மூடப்பட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் போலீசார் மர்ம நபர்களைதேடி வந்தனர். இந்நிலையில் பட்ட பகலில் மீண்டும் 2-வது முறை ஜெயச்சந்திர ராஜாவை வெட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநிலத் தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அதன் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியம் அதிரடியாக அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியம் பேட்டி அளித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை 2-வது முறையாக மர்ம நபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நள்ளிரவு மீண்டும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை குற்றவாளிகள் 2-வது முறையாக தாக்கிய நிலையில் போலீஸ் தரப்பு நடவடிக்கை எதிர்பார்த்த அளவில் இல்லை. ஏனென்றால் முதல் முறை பாதிக்கப்பட்ட நபரை பட்டப் பகலில் 2-வது முறையாக கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. மேலும் என்ன காரணத்திற்காக மாநில நிர்வாகி தாக்கப்பட்டு உள்ளார் என்பது முதலில் தெரிய வேண்டும்.

    உரிய குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் மர்மம் அடங்கியுள்ளதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்கிறோம் என உத்திரவாதம் அளித்ததன் பேரில் மக்கள் நலன் கருதி இன்றும், நாளையும் ரேஷன் கடை அடைப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஏற்கனவே போலீசாருக்கு உரிய ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் தற்போது 2-வது முறையாக ஒத்துழைப்பு வழங்கி உள்ளோம். இதனை போலீசார் பயன்படுத்தி உரிய குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ரேஷன் கடை தொடர்ந்து மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    ஆகையால் தமிழக அரசின் உள்துறை செயலாளர் இதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலூர் முதுநகரில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து 17 வயது மாணவி வீட்டிற்கு வந்தார்
    • சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர்கள் பள்ளி மாணவியை பார்த்தபோது திடீரென்று காணவில்லை,

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து 17 வயது மாணவி வீட்டிற்கு வந்தார். வீட்டில் பள்ளி மாணவி தூங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர்கள் பள்ளி மாணவியை பார்த்தபோது திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவி தேடி வருகின்றனர்.

    • இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார்.
    • கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 44). இவர் தனது நிலத்தில் தென்னங்கன்று வைத்து அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மூலம் பராமரித்து வந்தார். இந்த நிலையில் இளையராஜா, கனகராஜை வேலைக்கு வர வேண்டாம் என நிறுத்திவிட்டார்.   சம்பவத்தன்று கனகராஜ் மற்றும் 3 நபர்கள் திடீரென்று நிலத்திற்குள் நுழைந்து 30 தென்னங் கன்றுகளை சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட இளையராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் கனகராஜ், அருள், வேல் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டலூர் அடுத்த பெரியபட்டில் தனியார் எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலை உள்ளது‌.
    • இந்த தொழிற்சாலை இயங்காத காரணத்தினால் தொழிற்சாலைகளில் இருந்து டன் கணக்கில் இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த பெரியபட்டில் தனியார் எண்ணெய் சுத்திகரிக்கும் தொழிற்சாலை உள்ளது. தற்போது இந்த தொழிற்சாலை இயங்காத காரணத்தினால் தொழிற்சாலைகளில் இருந்து டன் கணக்கில் இரும்பு பொருட்களை மர்ம நபர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருடி வருகின்றனர்இந்த நிலையில் இன்று அதிகாலை தனியார் தொழிற்சாலையில் இரும்பு பொருட்களை 3 பேர் கொண்ட கும்பல் திருடிக் கொண்டிருந்தது. அப்போது தொழிற்சாலை நிர்வாகி சாமிநாதன் என்பவர் பார்வையிட்டு 3 பேரை பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    மேலும் அவர்களிடமிருந்து 150 கிலோ இரும்பு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் ஆலப்பாக்கம் சேர்ந்த தீனதயாளன் (வயது 36), தீர்த்தனகிரி சேர்ந்தவர்கள் தட்சிணாமூர்த்தி (50), குமார் (40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக வழங்கினார்கள்
    • மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது

    கடலூர்:

    கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் கடலூர் வருவாய் கோட்டத்தில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் 3 சக்கர மோட்டார் சைக்கிள், வங்கி கடன், மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக வழங்கினார்கள்.

    இதனை தொடர்ந்து மாற்றத்திறனாளிகள் வழங்கிய மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அப்போது சமூக பாதுகாப்பு தாசில்தார் பிரகாஷ், தலைமையிடத்து துணை தாசில்தார் பழனி, மண்டல துணை தாசில்தார் துரைராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.
    • கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்

    டிசம்பர் 3 இயக்கம் மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நலச்சங்கம் சார்பில் மாற்றத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.ஒரு லட்சம் வரை ஜாமீன் இல்லாமல் வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.

    இதனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் மாவட்ட செயலாளர் அமரேசன், துணைத் தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி செயலாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வட்டி இல்லா கடன் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கி வருகிற 20 ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
    • மொத்தம் 868 மாணவர்கள், 393 மாணவிகள் என மொத்தம் 1261 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கி வருகிற 20 ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கடலுார் கல்வி மாவட்டத்தில் 236 பள்ளிகள் மூலம் 10309 மாணவர்கள், 9570 மாணவிகள் மொத்தம் 19779 மாணவர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 209 பள்ளிகள் மூலம் 7965 மாணவர்கள், 6950 மாணவிகள் மொத்தம் 14915 மாணவர்களும் என மொத்தம் 445 பள்ளிகள் மூலம் 18274 மாணவர்கள், 16520 மாணவிகள் மொத்தம் 34794 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.   இது தவிர தனித்தேர்வர்களாக கடலுார் கல்வி மாவட்டத்தில் 423 மாணவர்கள், 210 மாணவிகளும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 445 மாணவர்கள், 183 மாணவிகள் மொத்தம் 628 மாணவர்களும் என மொத்தம் 868 மாணவர்கள், 393 மாணவிகள் மொத்தம் 1261 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கடலுாரில் 80 மையங்களும், விருத்தாச்சலத்தில் 69 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 தேர்வு மையத்தில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியதை யொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் தேர்வுகள் சரியாக நடைபெறுகிறதா? அனைத்து மாணவர்களுக்கும் கேள்வித்தாள் வழங்கப்பட்டுள்ளதா? அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா? திடீர் மின்தடை ஏற்பட்டால் மாற்று நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி ராமகிருட்டிணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 241 அரசுப் பளளியில் 8652 மாணவர்களும், 9104 மாணவிகளும், அரசு உதவி பெறும் 31 பள்ளிகளை சேர்ந்த 1607 மாணவர்களும் 1449 மாணவிகளும், 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த 2747 மாணவர்களும், 2068 மாணவிகளும் என ஆக மொத்தம் 25627 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 121 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்காக 4 மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 125 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது. மேலும், அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து வசதிகள், முதலுதவி சிகிச்சை போன்றவைகள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • சின்ன வாய்க்கால் பகுதியில் வசித்து வருபவர் சுருதி (வயது 28) இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றது.
    • முன்தினம் நெஞ்சுவலி அதிகமாகவே தனது வீட்டில் தலைக்கு தடவும் எண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த த.ச. பேட்டை மீனவர் காலனி சின்ன வாய்க்கால் பகுதியில் வசித்து வருபவர் சுருதி (வயது 28) இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றது. கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நெஞ்சுவலி அதிகமாகவே தனது வீட்டில் தலைக்கு தடவும் எண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார்.
    • அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தி ஆபாச வார்த்தைகளால் பொது இடத்தில் நின்று கொண்டு ஒருவர் பேசிவந்தார். தகவல் அறிந்து சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்தில் இருந்த நபருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்..

    அவர் இதனை மீறியும் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தவே அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள நடராஜன் (வயது 42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • ராமச்சந்திரன் (வயது 18). சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்
    • இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ராமச்சந்திரன் (வயது 18). சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு கூலி வேலை செய்தார். இவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது சகோதரி கல்பனா 3 மாதங்களுக்குப் முன்பு இறந்து விட்டார். இவரது தாய் மணிமேகலை ஈரோட்டில் கரும்பு வெட்டும் வேலை செய்து வருகின்றார். இவரது பாட்டி பவுனம்பாம்பாள் (60) என்பவருடன் கொத்தனூரில் வசித்து வந்தார்.அ தே ஊரை சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் மோகன்ராஜ் குற்றவழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார். இதனால் மோகன்ராஜிடம் பேச வேண்டாம் என்று இவரது பாட்டி சொல்லி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராமச்சந்திரனை வெட்டி கொலை செய்தார்.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் கொலை செய்த கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (21), ராமலிங்கம் மகன் கந்தசாமி (18) கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் மகன் வெற்றிவேல்(17), மடப்பட்டு கிராமத்தை சார்ந்த வடிவழகன் மகன் கஜேந்திரன் (19) ஆகிய 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேப்பூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்து கும்பகோணம் நோக்கி நடைபயணமாக சென்றனர்
    • அப்போது எ.சிற்றுர் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பாபு பலியானார்.

    கடலூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவள்ளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாபு (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவரும், அதே ஊரைச் சேர்ந்த மனோகரன் (42) என்பவரும் கும்பகோணம் சூரிய பகவான் கோவிலுக்கு காரில் வந்தனர். வேப்பூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்து கும்பகோணம் நோக்கி நடைபயணமாக சென்றனர். அப்போது எ.சிற்றுர் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பாபு பலியானார். இவருடன் சென்ற மனோகரன் லேசான காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம் - விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். வேப்பூர் அருகே விளம்பாவூர் அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார்    இந்த 2 விபத்துகள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×