என் மலர்
சென்னை
- அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
- முழு ஆண்டு தேர்வுக்குப் பிறகு ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதில், 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்; அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மேலும், அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகளுக்கு 2026ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி முழு ஆண்டு தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி வேலை நாட்கள் 2026 ஏப்ரல் 24ம் தேதியுடன் நிறைவுபெறும் என்றும் ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
- மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னை போரூர் டி.எல்.எப் - எல் அண்ட் டி அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திட்டத்தின் பொறுப்பாளர் நரேந்திர கிருஷ்ணா, திட்ட மேலாளர் டாடா ராவ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரெயில் பால தூண்கள் விழுந்து உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் நிறுவனம் ரூ.5 லட்சமும், எல் அண்ட் டி நிறுவனம் ரூ.20 லட்சமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருக்கிறது.
- மாற்றுத் தேதிகள் wwv.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருப்பதால், அதே நாளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் தேதிகள் wwv.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்தது.
- பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சந்தித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழு, சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் சந்தித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்தது.
பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று சந்தித்துள்ளனர்.
பரந்தூர் மக்களின் சந்திப்பு முடிந்த பிறகு, ஜாக்டோ- ஜியோ ஒரு பிரிவினரும் சந்திக்க உள்ளனர்.
- திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
- குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது.
கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "189 குடும்பங்களுக்கு நரேலாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டாலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை" என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
- வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்யும் “உடன்பிறப்பே வா’’ தொடங்கியது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு நிலவரம் எப்படி உள்ளது என்பதையும் அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினராக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.
இதற்காக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி முதல் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தொடங்க உள்ளது.
இதற்கிடையே மதுரையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் பேசுகையில்," ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்னவென்றால், ''உடன்பிறப்பே வா'' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக, தனித்தனியாக பேசுவோம்.
தி.மு.க. உடன் பிறப்புகளுடனான உறவு என்பது அரசியல் கட்சி என்ற அளவிலும், நிர்வாகிகள், தொண்டர்கள் என்ற அளவிலும் இருக்கும் தொடர்புகளை போன்றதல்ல.
தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் தி.மு.க.வின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் காத்து நிற்கக் கூடியவர்கள்.
அப்படிப்பட்ட உடன் பிறப்புகளை கலைஞர் வழியில், அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து எளிமையாக உரையாட உள்ளேன்" என்றார்.
இந்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை ஆய்வு செய்வதற்காக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்தித்து பேசும் ''உடன்பிறப்பே வா'' நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
இன்று காலையில் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய 3 தொகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து உரையாடினார்.
இந்த ஆலோசனையில் 3 தொகுதிகளையும் சேர்ந்த ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பேரூர் செயலாளர் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஒரு தொகுதிக்கு அதிகபட்சமாக 7 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக அழைத்து, தொகுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு நிலவரம் ஆகியவை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சிதம்பரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க. வசம் சென்றன. எனவே கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தி.மு.க. தலைமை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வென்ற தொகுதிகளில் இருந்தே தனது ''உடன்பிறப்பே வா'' என்னும் தொகுதி வாரியான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ளார்.
அதன்படி சிதம்பரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய போது, ''வருகிற தேர்தலில் இந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
- தொழில் அதிபர் வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
- சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரிலேயே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ 3-வது தெருவில் முத்து என்ற தொழில் அதிபர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழில் அதிபர் முத்துவின் வீட்டுக்கு காலை 7 மணி அளவில் சென்ற வீட்டில் உள்ள ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தினார்கள்.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரிலேயே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தொழில் அதிபர் முத்துவின் பின்னணி மற்றும் தொழில்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும்.
- பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது.
டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர். அதன் பிறகு அன்புமணி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.
ராமதாசின் இந்த அறிவிப்பு அன்புமணியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பினார். அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.
மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் டாக்டர் ராமதாசின் பிடிவாதத்தால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அன்புமணி கருத்துக்கள் கேட்டார். இந்த திடீர் ஆலோசனையால் அடுத்தகட்டமாக அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு கட்சி தொண்டர்கள் இடையே நிலவுகிறது.
இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் இன்று பேட்டியளித்தபோது என் மூச்சு இருக்கும் நானே பா.ம.க. தலைவர் என்று அதிரடியாக அறிவித்தார். இதுபற்றியும் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும். சமூக நீதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. சமூக நீதி கடமைகளை திராவிட மாடல் அரசு குழிதோண்டி புதைக்கிறது.
5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை, தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. உழவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை.
மது, கஞ்சா போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. அவை கட்டுப்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.
கல்வி, தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. மொத்தத்தில் ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டு உள்ளது.
அரசின் இந்த அவலங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பா.ம.க. ஜூலை 25-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்க உள்ளது. இந்த பயணம் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழக மக்களின் நலனுக்கானது. எனவே அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு கர்நாடகா -தெலுங்கானா ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
15-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
17-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மற்றும் 15-ந்தேதிகளில்: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.
- மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர்.
சென்னை:
பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது.
டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர். அதன் பிறகு அன்புமணி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.
ராமதாசின் இந்த அறிவிப்பு அன்புமணியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பினார். அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.
மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் டாக்டர் ராமதாசின் பிடிவாதத்தால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அன்புமணி கருத்துக்கள் கேட்டார். இந்த திடீர் ஆலோசனையால் அடுத்த கட்டமாக அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு கட்சி தொண்டர்கள் இடையே நிலவுகிறது.
இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் இன்று பேட்டியளித்த போது என் மூச்சு இருக்கும் நானே பா.ம.க. தலைவர் என்று அதிரடியாக அறிவித்தார். இதுபற்றியும் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தினார்.
- சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை:
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.
திரு.வி.க.நகர் பஸ் நிலையம், அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், பெரியார் நகர் பஸ் நிலையம், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன சந்தை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மகாபலிபுரம், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் பஸ் நிலையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முத்திரைகளாக உருவாக்கப்பட்டு வருகிறது.
பெரியார் நகர் மற்றும் திரு.வி.க. நகர் பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டு அடுத்த மாதம் ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும் பொழுது வடசென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி ஆகி இருக்கும்.
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறுவது, தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது, அண்ணாமலையை மேடை ஏற சொல்லுங்கள் சொன்னதை எத்தனை செய்துள்ளோம் சொல்லாததை எத்தனை செய்துள்ளோம் என்று பட்டியலிடுகிறோம், குறை சொல்லக்கூடிய தளத்தில் இருப்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். அரசியல் களம் வேண்டும் என்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை போன்றோர் சொல்லிக் கொண்டு உள்ளார்கள், நடுநிலையாளர்கள் இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள், வசை பாடியவர்கள் கூட இந்த ஆட்சியை வாழ்த்துகிறார்கள்.
முடிச்சூர் பஸ் நிலையத்தை பொறுத்தவரையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கூடிய விரைவில் வழக்கை இறுதிக்கு கொண்டு வந்து முடிச்சூர் பஸ் நிலையத்தை ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளின் போது, ராமாபுரம் அருகே இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததில் அவ்வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.






