என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
    X

    நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    • தொழில் அதிபர் வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    • சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரிலேயே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் லேக்வியூ 3-வது தெருவில் முத்து என்ற தொழில் அதிபர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    4 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழில் அதிபர் முத்துவின் வீட்டுக்கு காலை 7 மணி அளவில் சென்ற வீட்டில் உள்ள ஆவணங்களை பார்த்து சோதனை நடத்தினார்கள்.

    சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரிலேயே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    தொழில் அதிபர் முத்துவின் பின்னணி மற்றும் தொழில்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×