என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadoss"

    • தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும்.
    • பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இடையேயான அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது.

    டாக்டர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, 2026 தேர்தல் வரை நான்தான் தலைவர். அதன் பிறகு அன்புமணி எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

    ராமதாசின் இந்த அறிவிப்பு அன்புமணியை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அவசர அவசரமாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பினார். அன்புமணியின் அழைப்பின் பேரில் மாவட்ட செயலாளர்கள் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திரண்டனர்.

    மொத்தம் 108 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் டாக்டர் ராமதாசின் பிடிவாதத்தால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அன்புமணி கருத்துக்கள் கேட்டார். இந்த திடீர் ஆலோசனையால் அடுத்தகட்டமாக அன்புமணி என்ன முடிவு எடுப்பார் என்ற பரபரப்பு கட்சி தொண்டர்கள் இடையே நிலவுகிறது.

    இதற்கிடையே டாக்டர் ராமதாஸ் இன்று பேட்டியளித்தபோது என் மூச்சு இருக்கும் நானே பா.ம.க. தலைவர் என்று அதிரடியாக அறிவித்தார். இதுபற்றியும் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்றுவது பா.ம.க.வின் கடமையாகும். சமூக நீதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. சமூக நீதி கடமைகளை திராவிட மாடல் அரசு குழிதோண்டி புதைக்கிறது.

    5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை, தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. உழவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை.

    மது, கஞ்சா போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து உள்ளது. அவை கட்டுப்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது.

    கல்வி, தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. மொத்தத்தில் ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஏமாற்றப்பட்டு உள்ளது.

    அரசின் இந்த அவலங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பா.ம.க. ஜூலை 25-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

    இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்க உள்ளது. இந்த பயணம் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழக மக்களின் நலனுக்கானது. எனவே அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    • ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. முன்னாள் தலைவர் பேராசிரியர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்-அன்புமணி இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. நல்ல செய்தி வரும் என ராமதாஸ் கூறியது சமாதானம் என கூறலாம்.

    ஆகஸ்ட் மாதம் நடக்கும் மகளிர் மாநாட்டு பணிகளை கவனிக்குமாறு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசின் நீண்ட நாள் நண்பர் என்பதால் அவரை சந்தித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரது அணுகுமுறையை அனைவரும் கடைபிடிப்போம்.
    • விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்து அரசியல் கட்சிகளாலும் போற்றப்படும், வணங்கப்படும் பசும்பொன் தேவர் பெருமகனாரின் 116-வது பிறந்தநாளும், 61-வது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரை அனைவரும் போற்றி வணங்குவோம். மக்களுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவரது அணுகுமுறையை அனைவரும் கடைபிடிப்போம்.

    ஒரு சமூகத்தையே அதன் பிறப்பால் குற்றவாளிகளாக முத்திரைக் குத்தி களங்கப்படுத்தும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர் ஆட்சியிலும், விடுதலை இந்தியாவிலும் போராடி அவர் பெற்ற வெற்றி ஈடு இணையற்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமது நிலங்களை வழங்கியது, தொழிற்சங்க தலைவராக இருந்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது என அனைத்துத் தரப்பு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் மட்டுமின்றி, எந்த நாளும் நினைவு கூர்வோம்; போற்றுவோம்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது.
    • ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலை வாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் திகழும் தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தருமபுரி மாவட்ட மக்கள்நலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், அதில் 1.96 லட்சம் ஹெக்டேர், அதாவது 43.52 சதவீதம் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை. மீதமுள்ள 56.48 சதவீதம் நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம் நடைபெறுகிறது. அதனால், தருமபுரி மாவட்ட வேளாண் குடும்பங்கள் நிலம் இருந்தும் பாசன ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு, 3 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் வேலை தேடிச் சென்றுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கும் நிலையில், அந்த அணைகளில் மட்டுமின்றி, 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகளிலும் நிரப்பி ஆண்டு முழுவதும் உழவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உன்னத திட்டம் தான் தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டம் ஆகும்.

    இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.

    ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி-காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க அரசு மறுக்கிறது.

    தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே தொடர்வதை அனுமதிக்க முடியாது. தருமபுரி மாவட்டத்தின் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளையும் ஏற்று, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 4-ந் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க. அழைப்பு விடுத்திருக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் வளமான எதிர்காலத்திற்காக நடத்தப்படும் இந்த அறவழிப் போராட்டத்திற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு கொடுத்து, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனக் கோருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர்.
    • தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தொழில் திட்டங்களின் எண்ணிக்கை 500 சதவீத உயர்த்திக் கூறுகிறார் அமைச்சர். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொழில் முதலீடுகளைக் கொண்டு தமிழ்நாட்டை வளர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; மாறாக, பொய் முதலீடுகளைக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மட்டும் தான் தி.மு.க. அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த பொய்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    எனவே, தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
    • மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மூன்று விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

    மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உழவர்களின் ஒப்பற்றத் தலைவர் என்றால் அது சவுத்ரி சரண்சிங் தான்.
    • மூன்று முத்தான சட்டங்களைக் கொண்டு வந்தவர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில்,

    உழவர்களின் நலனுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட சவுத்ரி சரண்சிங்கின் பிறந்தநாளான இன்று தேசிய உழவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள உழவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உழவர்களின் ஒப்பற்றத் தலைவர் என்றால் அது சவுத்ரி சரண்சிங் தான். உத்தரப்பிரதேச அமைச்சர், உத்தரப்பிரதேச முதலமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், மத்திய நிதியமைச்சர், துணைப் பிரதமர், பிரதமர் என ஏராளமான பதவிகளை வகித்த போதும் கடைசி வரை உழவர்களை மறக்கவில்லை. அவர் உழவர்களுக்காகவே வாழ்ந்தவர்; உழைத்தவர். உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த போது, 1) கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து உழவர்களை மீட்க, கடன் மீட்பு சட்டம், 2) உழுபவர்களுக்கே நிலத்தை சொந்தமாக்கும் சட்டம், 3) ஜாமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் ஆகிய மூன்று முத்தான சட்டங்களைக் கொண்டு வந்தவர். அந்த சட்டங்கள் தான் உழவர்களை அழிவிலிருந்து மீட்டன.

    உழவர்களின் நலனுக்காக சரண்சிங்கிற்கு பல கனவுகள் இருந்தன. அந்தக் கனவுகளை நனவாக்குவதற்காக போராடுவதற்கு இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம் என கூறியுள்ளார். 

    ×