என் மலர்
சென்னை
- திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வந்துள்ள செய்தி, கடும் கண்டனத்திற்குரியது. ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், ஆரம்பகால வளர்ச்சியையும் கேள்விக்குறியாக்கும் இச்செயல், திமுக அரசின் நிர்வாகத் திறனின்மையைக் கோடிட்டு காட்டுகிறது.
திமுக அரசு தங்கள் அற்ப அரசியல் வீம்புக்காக நிராகரித்து வரும் தேசிய கல்விக் கொள்கையில் (NEP), அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்னிலை வழங்கவும், கல்வி மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் பயிற்சி அளித்து அங்கன்வாடி மையங்களைத் தொடக்கப் பள்ளி போலவே மாற்றி அமைப்பதற்கான முன்னோடியான முயற்சியும் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெற்று விளம்பரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் அரசு, அங்கன்வாடி ஊழியர்கள் பற்றாக்குறையைச் சரி செய்ய முடியாமல் அங்கன்வாடி மையங்களையே மூடுவதற்கு ஆயத்தமாகி வருகிறது.
2021 தேர்தலின்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு திமுக வழங்கிய வாக்குறுதியான (வாக்குறுதி எண் 313) "சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும்" என்பது நான்காண்டுகள் ஆகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியும் வளர்ச்சியும் பாதிக்காத வகையில் அங்கன்வாடி மையங்களை மூடுவதைத் தவிர்த்து அவற்றைச் செவ்வனே நடத்திடவும் வலியுறுத்துகிறேன்.
- ‘மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம்’ என்கிற எழுச்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் சந்தித்து உறவாட வருகிறேன்.
- திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னுள் கலந்திருக்கும் எனதருமைத் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியைச் சொல்லவே இந்தக் கடி தத்தை எழுதுகிறேன். என்னைப் பற்றி எல்லாமும் உங்களுக்குத் தெரியும். என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.
என் உயிருக்கு நெருக்கமான உறவாக இருக்கின்ற உங்களோடு இருக்கவே நான் எப்போதும் ஆசைப்படுபவன். சாமானியனிலும் சாமானியனாக உங்களோடு கலந்து உறவாட விரும்புகிறவன். தமிழ்க்குடியினர் அனைவரும் தலைநிமிர்ந்து செம்மாந்து வாழ்வதற்கு எனது செயல்கள் அனைத்தையும் அர்ப்பணிக்க நினைப்பவன்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைத்துக் கொடுத்த லட்சியப் பாதையில் தமிழ்நாட்டை வழி நடத்த வேண்டும் என நித்தமும் உழைப்பவன். எனது தனிப்பட்ட வாழ்வும் அரசியல் வாழ்வும் வெவ்வேறானவை அல்ல. அவை ஒன்றோடு ஒன்று கலந்தவை என்பதை எனது நெஞ்சகத்தை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
* 'மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம்' என்கிற எழுச்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் சந்தித்து உறவாட வருகிறேன்.
* இந்தப் புரட்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் எழுச்சிமிக்கவர்களாக மாற்றுவது மட்டுமே எனது நோக்கம். வெற்றிகரமான ஒரு தமிழ்நாட்டை மீண்டும் உருவாக்குவதே எனது இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம்.
* உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களோடு உறவாடி நிற்பேன். உங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் காதுகொடுத்துக் கேட்கும் சேவகனாக இருப்பேன்.
தமிழ்நாட்டு மக்களைத் தேடி வரும் இந்த எழுச்சிப் பயணம், உங்கள் பங்களிப்போடு ஒரு மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணமாக மாறும் என்பதில் எள் முனையளவும் எனக்கு சந்தேகமில்லை.
இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டு உள்ளது. எனவே, திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?
சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எவரும் தமிழ்நாட்டில் பாதுகாப்போடு நடமாடமுடியவில்லை. சிறுவர்களைச் சிதைக்கிற பெருங்குற்றங்கள் அதிகரித்து விட்டன. முதியோர்கள் உயிரைத் தொடர்ச்சியாகப் பறிக்கிற ஈவு இரக்கமற்ற செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தி.மு.க. அரசாங்கம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியில்கூட அரசியல் செய்கிறது. போலி வாக்குறுதிகளைக் கொடுத்து பொய்யான ஆட்சி நடத்துகிறது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, உங்களை எல்லாம் என்னோடு இணைந்து வர அழைக்கிறேன்.
அமைதியான தமிழ்நாடு, வளமான தமிழ்நாடு, நிறைவான தமிழ்நாடு, இவைதான் நமது லட்சியம். நாம் வெல்வது நிச்சயம்! விலகாத இருள் விலகட்டும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலரட்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- AI & DS, CS, ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது.
- பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 14-ந்தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. AI & DS, CS, ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளையும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 14-ந்தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வருகிற 8-ந்தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 21 பேர் கொண்ட புதிய நிர்வாக குழுவை அறிவித்துள்ளார்.
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, அன்புமணி தரப்பு நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கி வருகிறார்.
இதனிடையே, நேற்று புதிய நிர்வாக குழுவினருடன் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். புதிய பா.ம.க. நிர்வாக குழுவில் ஜி.கே.மணி, முரளி சங்கர், கரூர் பாஸ்கர், அருள், பரந்தாமன், சிவபிரகாசம், தீரன், புதா.அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வருகிற 8-ந்தேதி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பா.ம.க. நிர்வாகக்குழுவில் இருந்து அன்புமணியை நீக்கி டாக்டர் ராமதாஸ் இன்று உத்தரவிட்டார். 21 பேர் கொண்ட புதிய பொறுப்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார்.
இதில் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சிவப்பிரகாசம், பு.தா. அருள்மொழி, தீரன், திருக்கச்சூர் ஆறுமுகம், ஏ.கே. மூர்த்தி, முரளி சங்கர், சையது மன்சூர் உசேன், துரை கவுண்டர், அருள், நெடுங்கீரன், கவிஞர் ஜெய பாஸ்கரன், முத்து குமரன், வைத்தியலிங்கம், அன்பழகன், பரந்தாமன், ம.க ஸ்டாலின், கரூர் பாஸ்கரன், சுஜாதா கருணாகரன், சரவணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி வருவதும், அவர்களுக்கு அன்புமணி மீண்டும் பதவி வழங்கி வருவதும் நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
- கடந்த 26-6-2025 அன்று மொகரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது.
- தவறான தகவலை பரப்பாதீர்.
சென்னை:
மொகரம் பண்டிகையை முன்னிட்டு 7-ந் தேதி (நாளை) அரசு விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது, வதந்தி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
"கடந்த 26-6-2025 அன்று மொகரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-6-2025 தேதி அன்று மொகரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 6-7-2025 ஆகும்" என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அந்த தினம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 7-ந் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை இல்லை. தவறான தகவலை பரப்பாதீர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- துரைபிள்ளை தெரு, இந்திரா காந்தி தெரு, கவிதா தெரு, நேரு தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (07.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அரும்பாக்கம் : ஜெய் நகர் 4 முதல் 7-வது தெரு, பிரகதீஸ்வரர் நகர், துரைபிள்ளை தெரு, இந்திரா காந்தி தெரு, கவிதா தெரு, நேரு தெரு, நேரு நகர், வீனா கார்டன், விபி நகர், நியூ தெரு.
தாம்பரம்: மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர், ஞானானந்த நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன், ரேணுகாம்பாள் நகர், ராகவேந்திரா நகர், கிருஷ்ணா நகர், அன்ஷா கார்டன்.
- இந்தி திணிப்புக்கு எதிராக ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது.
- மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
"தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்!" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.
இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே அவர்கள் தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.
"உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் ராஜ் தாக்கரே அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?
இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல!
இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், "இந்தி படித்தால் வேலை கிடைக்கும்" என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்!
தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்!
ஒன்றிணைவோம் வா!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலில் தன்னையும், தன்னை சார்ந்து இருக்கும் இயக்கத்தையும் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
- மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டுதான் முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார்.
பரந்தூர் விமான நிலையம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசியதற்கு அமைச்சர் பி.கே. சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது:-
தவெக தலைவர் விஜயை முதலில் மக்களை நோக்கி பயணத்தை தொடங்க சொல்லுங்க. பயணத்தையே செப்டம்பரில் தான் தொடங்குவேன் என்றார்.
நேற்று காத்திருந்த தொண்டர்களைக் கூட பார்க்கவில்லை என்கிற செய்திகளும் வந்தது. அவர் முதலில் தன்னையும், தன்னை சார்ந்து இருக்கும் இயக்கத்தையும் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
மக்களை பாதுகாக்க எங்கள் மக்களின் முதல்வர் இருக்கிறார். நிச்சயமாக அவரது முன்னெடுப்பிலே யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், அதேநேரத்தில், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில்தான் வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகளை அமைக்கின்றபோது, மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துவிட்டுதான் முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார்.
எடுத்தேன் கவுத்தேன் என்பது போல், கடந்த காலங்களைப்போல் எங்கள் முதல்வர் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி ஒரு திட்டத்தை கொண்டுவருவதற்கு நிச்சயமாக முற்படமாட்டார்.
அதனால், தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன் என்ற அரைக்கூவல் எல்லாம், அரைக்குள் இருந்தே விட்டுக் கொண்டிருக்கிறார்.
யாராக இருந்தாலும் முதல்வர் எளிதாய கையாண்டுவிடுவார். ஆங்கிலத்தில் சொல்லவார்களே முதல்வர் Left Hand-ல் டீல் செய்துவிடுவார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியைச் சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
- லட்சியப் பாதையில் தமிழ் நாட்டை வழிநடத்த வேண்டும் என நித்தமும் உழைப்பவன்.
மக்களைக் காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்!' என்னுள் கலந்திருக்கும் எனதருமைத் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியைச் சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை எழுதும்போதே எனது உள்ளம் மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைகிறது. என்னைப் பற்றி எல்லாமும் உங்களுக்குத் தெரியும். என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.
என் உயிருக்கு நெருக்கமான உறவாக இருக்கின்ற உங்களோடு இருக்கவே நான் எப்போதும் ஆசைப்படுபவன். சாமானியனிலும் சாமானியனாக உங்களோடு கலந்து உறவாட விரும்புகிறவன். தமிழ்க் குடியினர் அனைவரும் தலைநிமிர்ந்து செம்மாந்து வாழ்வதற்கு எனது செயல்கள் அனைத்தையும் அர்ப்பணிக்க நினைப்பவன்.
'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் அமைத்துக் கொடுத்த லட்சியப் பாதையில்
தமிழ் நாட்டை வழிநடத்த வேண்டும் என நித்தமும் உழைப்பவன்.
எனது தனிப்பட்ட வாழ்வும் அரசியல் வாழ்வும் வெவ்வேறானவை அல்ல. அவை ஒன்றோடு ஒன்று கலந்தவை என்பதை எனது நெஞ்சகத்தை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
ஓர் இனிய செய்தி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா... அது என்னவென்றால், உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க உங்களைத் தேடி வருகிறேன். உங்கள் இல்லத்தையும், உள்ளத்தையும் தொட்டுப் பேச வருகிறேன்.
மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் சந்தித்து உறவாட வருகிறேன்.
இந்தப் புரட்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் எழுச்சிமிக்கவர்களாக மாற்றுவது மட்டுமே எனது நோக்கம். வெற்றிகரமான ஒரு தமிழ் நாட்டை மீண்டும் உருவாக்குவதே எனது இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம்.
இது எனது தனிப்பட்ட பயணம் அல்ல... ஒட்டுமொத்த தமிழ் நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம்!
இது எனது தனிப்பட்ட சுற்றுப் பயணம் அல்ல.... ஆட்சி மாற்றத்தையும் சமூக முன்னேற்றத்தையும் விரும்பும் ஒவ்வொரு தமிழரின் சுற்றுப் பயணம்!
இந்தப் பயணம் 'விடியா ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்'. இந்தப் பயணம் மாநிலம் காக்க 'மாபெரும் பயணம்'
இந்தப் பயணத்தில் உங்களை எல்லாம் மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முன்னணிக் களவீரனாக நான் இருப்பேன்!
இந்தப் பயணப் போர்க்களத்தில், ஆளும் கட்சியின் கொடுமைகளையும், சிறுமைகளையும் எதிர்த்துப் போராடும் ஒரு சிப்பாயாக இருப்பேன்!
நடக்கும் அனைத்துக் கொடுமைகளுக்கும் எதிராக, உங்கள் கைகளோடு எனது கையையும் இணைத்து உயர்த்துவேன்.
உங்கள் எண்ணங்களோடு, எனது எண்ணத்தையும் இணைத்து சிறுமைகளுக்கு எதிராகக் குரலுயர்த்துவேன்.
உங்களில் ஒருவனாக உங்களோடு நிற்பேன். உங்கள் தோளோடு தோள் சேர்த்து ஒரு தோழனாக நிற்பேன்.
உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களோடு உறவாடி நிற்பேன். உங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் காதுகொடுத்துக் கேட்கும் சேவகனாக இருப்பேன்.
தமிழ் நாட்டு மக்களைத் தேடி வரும் இந்த எழுச்சிப் பயணம், உங்கள் பங்களிப்போடு ஒரு மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணமாக மாறும் என்பதில் எள் முனையளவும் எனக்கு சந்தேகமில்லை.
இதற்கெல்லாம் முன்பாக, சில விஷயங்களையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... தனிமனித வளர்ச்சியிலும், கூட்டு வளர்ச்சியிலும் வீறுநடைபோட்ட தமிழ்நாடு இப்போது, சில விஷமிகளின் சுயநலத்தால் தள்ளாடுகிறது.
மாலுமியை இழந்த கப்பல் போல இலக்கு தெரியாமல் தத்தளிக்கிறது. ஆட்சி நடத்துகிறவருக்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் பற்றிய கவலை இல்லை.
தன் பெண்டு - தன் பிள்ளை - தன் வளம் போன்றவை மட்டுமே லட்சியமாக இருக்கின்றன. அரசாங்கத்தின் அத்தனை பாகங்களிலும் மக்கள் மீதான அலட்சியம் குடியேறிவிட்டது. மக்கள் நலனுக்கு எதிரான ஊழல் கோரத் தாண்டவமாடுகிறது. எளியவர்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் போக்கு ஆட்சியாளர் மனத்தில் நிறைந்துவிட்டது.
தமிழ் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் இப்போது மகிழ்ச்சியாக இல்லையே..... ஏன்?
ஒருசில கல்விக் கூடங்களும், சில சமூக ஊடகங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கூடாரமாக தொடர்ந்து செயல்படுவது ஏன்?
அமைதிப்பூங்காவான தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டாலும், போதைப் பொருள் பெருக்கத்தாலும் அல்லலுறுவது ஏன்?
அதிகாரத்தைக் காட்டி தனிமனிதச் சொத்துக்களை அபகரிப்பதை இந்த அரசு மூடி மறைப்பது எதனால்?
அரசின் அச்சாணியாக இயங்கும் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கப்படவேண்டிய செயல் அல்லவா?
தமிழகத்தில் 'கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன்' இல்லாத துறைகளே இல்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா? படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?
இப்படி, இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டுள்ளது. எனவே, திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?
சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எவரும் தமிழ் நாட்டில் பாதுகாப்போடு நடமாட முடியவில்லை. சிறுவர்களைச் சிதைக்கிற பெருங்குற்றங்கள் அதிகரித்துவிட்டன. முதியோர்கள் உயிரைத் தொடர்ச்சியாகப் பறிக்கிற ஈவு இரக்கமற்ற செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா அல்லது ஈவு இரக்கமற்ற நீரோ மன்னனின் கொடுங்கோலாட்சியில் இருக்கிறோமா என ஒவ்வொரு தமிழரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக வேதனை சூழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளும் தி.மு.க. அரசாங்கம் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வியில்கூட அரசியல் செய்கிறது. போலி வாக்குறுதிகளைக் கொடுத்து பொய்யான ஆட்சி நடத்தும் மூடர்களின் கொட்டத்தை அடக்கி வீட்டுக்கு அனுப்ப, உங்களை எல்லாம் என்னோடு இணைந்து வர அழைக்கிறேன்.
அமைதியான தமிழ் நாடு –
வளமான தமிழ் நாடு –
நிறைவான தமிழ் நாடு;
இவைதான் நமது லட்சியம். நாம் வெல்வது நிச்சயம்!
முடியாத கொடுமைக்கு முடிவுகட்டுவோம்!
விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!
தீய சக்தியை வதைத்திட,
நல்லாட்சியை விதைத்திட,
விலகாத இருள் விலகட்டும்,
தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சி மலரட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
- ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் போலீசாரால் அஜித்குமார் அடித்தக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி, போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.
6ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து வரும் 12ம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி புரிந்துள்ளது.
- கடந்த தேர்தலில் பொய் பிரசாரம் மூலமாகவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்ட உள்ளேன்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (7-ந்தேதி) கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
இதற்கான பிரசார பாடல் மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது.
புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற வாசகங்களுடன் இரட்டை இலை சின்னத்தின் பின்னணியில் ஒற்றை கையை உயர்த்தி பிடிக்கும் வகையில் இலச்சினை வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதனை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது ஒளிபரப்ப உள்ள வீடியோ பாடலும் வெளியிடப்பட்டது.
இவன் சரித்திரம் போற்றும் சாமானியன் என்ற தலைப்பில் உருவாகி உள்ள இந்த பாடல் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு முதலமைச்சர் என்னைப் பற்றி சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் இப்போதுதான் மக்களை சந்தித்து பேசுகிறார் என்று முதலமைச்சர் என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்.
நான் எப்போதும் இயல்பாக மக்களோடு இருப்பவன். நான் எப்போதும் மக்களை சந்தித்துக் கொண்டு, அவர்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கின்றேன். அதனால் தான் மக்களின் குறைகளை அறிந்து அவர்களின் குரலாக நானும் அ.தி.மு.க.வும் ஒலித்து வருகிறோம்.
அதனை அடுத்து மிக முக்கியமான அத்தியாயம்தான் இந்த எழுச்சி பயணம். என்னது? தேர்தல் பிரசாரம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம். தேர்தல் பிரசாரம்தான். ஆனால் இந்த பயணத்துக்கு ஒரு மிகப்பெரிய நோக்கம், தேவை இருக்கின்றது.
இந்த பயணத்தின் நோக்கம் விடியா ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்தி அவர்களிடம் மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பது. இந்த பயணம் எதற்காக என்றால் இந்த ஆட்சியில் சிறுமி முதல் முதியவர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உள்ளது. தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கிறது.
அ.தி.மு.க. மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். தி.மு.க.வை வேரோடு அழிக்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். ஜெயலலிதா சிறப்பான ஆட்சியை தந்தார். 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி புரிந்துள்ளது.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று பெயர் பெறுகின்ற அளவுக்கு திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு நன்மை செய்தோம்.
இந்த பயணத்தின் நோக்கம் கடந்த 50 மாத தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், வேதனைகள், கொடுமைகள் அத்தனையையும் பட்டியலிட்டு மக்களிடம் எடுத்து சொல்லி இந்த ஆட்சியை அகற்றுவதுதான் எங்களது நோக்கம், லட்சியம்.
இந்த தேர்தல் சுற்றுப்பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்களின் பேராதரவை அ.தி.மு.க. பெறும். 2026 சட்டசபை தேர்தலில் வென்று அ.தி.மு.க. வரலாறு படைக்கும்.
வருகிற 7-ந்தேதி எனது தேர்தல் சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்குகிறேன். தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். மக்களை நேரடியாக சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லி மக்கள் மனதிலே பதிய வைக்க உள்ளேன்.
இதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி அ.தி.மு.க. 2026-ல் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பதற்கு இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறேன்.
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. இதையெல்லாம் மக்களிடம் எடுத்து கூற இருக்கிறேன்.
கடந்த தேர்தலில் பொய் பிரசாரம் மூலமாகவே தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்ட உள்ளேன். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளும்போது அந்தந்த மாவட்டங்களின் பிரச்சனைகளை மக்கள் மத்தியில் எடுத்து கூறி அ.தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.






