என் மலர்tooltip icon

    சென்னை

    • மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
    • வரலட்சுமி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி, இன்று அதிகாலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை கீழ் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் அளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கண்ணகி நகர், எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்சார கேபிள்கள் அபாயகரமாக பல இடங்களில் உள்ளது என்று புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

    இதற்கிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமிக்கு 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் வரலட்சுமி தான். தாயை இழந்த குழந்தைகள் 'எங்க அம்மா விட்டுட்டு போய்ட்டாங்க...' என்று சொல்லி கதறுவது கண்போரை கண்கலங்க செய்துள்ளது. 

    • டாக்டர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
    • மருத்துவமனை தரப்பில் அவரது உடல் நிலை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

    சென்னை:

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தருமபுரியில் நேற்று இரவு துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். அப்போது திடீரென்று நெஞ்சு வலிப்பதாகவும், முதுகு தண்டு வலியாலும் அசவுகரியப்பட்டார்.

    உடனடியாக டாக்டர்கள் ஆலோசனைப்படி இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

    பின்னர் வானகரம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து வருகிறார்கள். மருத்துவமனை தரப்பில் அவரது உடல் நிலை பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள்.
    • மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.

    பாஜக அரசு வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது பற்றி நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டுள்ளன.

    தமிழ்நாட்டில் இந்த பிரச்சினையை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடத்தப்படுகிறது.

    இது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

    வாக்கு திருட்டு மூலம் பாஜக ஆட்சியை பிடித்து வருவதை ராகுல் காந்தி ஆதாரத்துடன் வெளிப்படுத்தியதால் மோடி அரசு ஆடிப் போய் இருக்கிறது. பதில் சொல்ல முடியாமல் திணறுகிறது.

    வாக்குரிமை என்ற ஜனநாயக அமைப்பையே சிதைத்து இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை தட்டிப் பறிக்க முயற்சிக்கிறார்கள்.

    விரைவில் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்குத் திருட்டுக்காக வாக்காளர் பட்டியலில் நடத்தப்பட்டுள்ள சதித்திட்டங்கள் அம்பலமாகி உள்ளது.

    எப்படியெல்லாம் பானக மக்களை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் மத்தியில் எடுத்து சொல்வதற்காக வாக்குத் திருட்டுகள் விளக்க மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இந்த மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கன்னியாகுமரியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ளோம். மாநாடு நடத்துவதற்கான இடத்தை இன்று பார்வையிட்டு தேர்வு செய்ய இருக்கிறோம்.

    அதேபோல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 130-வது சட்டத் திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்க்க காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 10-க்கும் குறைவான மாநிலங்களில் தான் ஆட்சியில் உள்ளன.

    அந்த மாநிலங்களில் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு 30 நாட்கள் ஜெயிலில் அடைத்து எதிர்கட்சி தலைவர்களை ஒழிக்க பாஜக அரசு முயல்கிறது. எனவே எதிர்க்கிறோம்.

    அரசியல் அமைப்பு சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்தால் மட்டுமே அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நடைமுறைகள் முடிவுக்கு வர பல ஆண்டுகள் வரை ஆகலாம்.

    எனவே அதை முறியடித்து தண்டனை கிடைத்ததும் பதவி நீக்கம் செய்வதை அமல்படுத்தியது காங்கிரஸ். இந்த சட்டம் அமலில் இருக்கும்போது அதில் புதிய திருத்தம் ஏன் செய்ய வேண்டும். இதில் இருந்தே அவர்களின் உள் நோக்கம் புரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
    • வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில், கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு, மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
    • 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2025-2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் தொடங்க இருக்கும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருவதோடு, பல்வேறு கோவில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெரும்விருப்பமாகவும் கொண்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு 2025-2026-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, "புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் கோவில்களுக்கு ஆண்டுதோறும் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1,000 பக்தர்களை ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அரசு நிதி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு நிதியில் 2,000 பக்தர்கள் வைணவத் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் கோவில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 2 ஆயிரம் பக்தர்கள் கட்டணமின்றி அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

    புரட்டாசி மாத வைணவத் கோவில்களுக்கான ஆன்மிகப் பயணமானது 4 கட்டங்களாக, அதாவது செப்டம்பர் 20, 27-ந்தேதி மற்றும் அக்டோபர் 4, 11-ந்தேதி ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் இருந்து தொடங்கப்பட உள்ளன.

    இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடம் இருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மிகப் பயணத்திற் கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் செப்டம்பர் 25-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 21-ந்தேதி கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 230-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.73 ஆயிரத்து 840-க்கும், நேற்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 215-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து சவரன் ரூ.73ஆயிரத்து 720-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9.315-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 74,520-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,720

    21-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,840

    20-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,440

    19-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,880

    18-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-08-2025- ஒரு கிராம் ரூ.128

    21-08-2025- ஒரு கிராம் ரூ.126

    20-08-2025- ஒரு கிராம் ரூ.125

    19-08-2025- ஒரு கிராம் ரூ.126

    18-08-2025- ஒரு கிராம் ரூ.127 

    • வேளச்சேரியில் இருந்து இன்று இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து.
    • கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில் ரத்து.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, வேளச்சேரியில் இருந்து இன்று(சனிக்கிழமை) இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    அதே போல கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளச்சேரி செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாரபத்தியில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது.
    • மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர்.

    மதுரை பாரபத்தியில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று இருந்தனர்.

    இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய த.வெ.க. தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் மாநாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. நல்லா இருந்தது மாநாடு. ரெஸ்பான்ஸ் நல்லா இருந்தது. நல்லா கூட்டம்.

    என்னோட ஆசீர்வாதம் எப்பவுமே இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவினரை பற்றி அதிமுகவினர் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.
    • விஜய் சொன்னதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என நீங்கள் கேட்டு சொல்லுங்கள்.

    மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் 2வது மாநாட்டில், தவெக தலைவர் விஜய் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார்.

    அ.தி.மு.க. குறித்து விஜய் பேசிய கருத்துக்கு அவர் கூறியதாவது:-

    அதிமுக தான் அதுகுறித்து பதில் சொல்ல வேண்டும். நான் எம்ஜிஆரை பற்றி சொன்ன உடனயே ஆ.. ஊ.. என்று எகிறிக் குதித்தவர்கள் இப்போது வாயை மூடிக்கொண்டுள்ளனர்.

    எம்ஜிஆர், அண்ணா, பெரியாரைப் பற்றி மிகவும் கொச்சையாக பேசுகிற பாஜகவினரை பற்றி அதிமுகவினர் ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை.

    தற்குறி எடப்பாடி பழனிசாமி என்று பேசியவர் அண்ணாமலை. அப்போது அவர்கள் வாயை மூடிக்கொண்டு எங்கேயோ மவுனித்து கிடந்தார்கள். வாய் திறந்து பேசவில்லை.

    சமூகத்தில் இருக்கின்ற விமர்சனங்கள் இப்படி இருக்கின்றன என்று யாரோ சொன்னதை மேற்கோள் காட்டி பேசினேன். உடனே பாய்ந்து, பிராண்டினார்கள்.

    இப்போது விஜய் சொன்னதற்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என நீங்கள் கேட்டு சொல்லுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில், கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியாகி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசனாது முதல் மிதமான மழை பெய்யும்.
    • சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசனாது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும், சென்னையிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
    • “நியாயம் – சமத்துவம் – சமூக நீதி” என்பதையே தங்கள் அரசியல் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

    ராகுல்காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது என்ற அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நெல்லையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய "ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக முடியாது" என்ற கருத்து, உண்மையில் மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

    இந்த நாடு ஜனநாயக நாடாகும். பிரதமர் யார் ஆக வேண்டும் என்பதை தீர்மானிப்பது மக்களின் வாக்குகள் தான். ஒன்றிய உள்துறை அமைச்சர் அல்லது ஏதேனும் ஒருவரின் வாய்மொழிக் கட்டளையோ, தாழ்வான அரசியல் கருத்தோ அதைக் குறிக்கவில்லை.

    இன்று முழு இந்தியாவிலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் "நியாயம் – சமத்துவம் – சமூக நீதி" என்பதையே தங்கள் அரசியல் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். அந்த இலட்சியங்களுக்காகத் தான் ராகுல் காந்தி அவர்கள் போராடுகிறார்.

    நீதி, அன்பு, சமத்துவம் ஆகியவற்றை குரலாக எடுத்துரைக்கும் ஒருவரை மக்கள் பிரதமராக கொண்டு வருவார்களா, இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் . வரலாறு கூறுவது ஒரே உண்மை – மக்களின் விருப்பத்தை யாராலும் தடுக்க முடியாது.

    உண்மையில், இந்த மாதிரியான ஆளும் கட்சியின் தோல்விப் பயத்தை வெளிப்படுத்தும் கூற்றுகளே, ராகுல்காந்தி அவர்கள் நாளைய பிரதமர் என்ற உண்மையை உறுதியாக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×