என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்குததல்"

    • சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
    • வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில், கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) என்பவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு, மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம் அருகே வயலில் கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள்- கன்றுக்குட்டி உயிரிழந்தன.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட உம்பளச்சேரி கீழ்பகுதியில் வசித்து வருபவர் திலகர்(வயது45). அதே ஊரை சேர்ந்தவர் சாந்தி(40). இவர்கள் 2 பேரும் தங்களது வீடுகளில் பசுமாடுகள் வளர்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் திலகருக்கு சொந்தமான ஒரு பசுமாடு மற்றும் கன்று குட்டி ஒன்றும், சாந்திக்கு சொந்தமான பசுமாடும் அந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் சம்பவத்தன்று மோய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வயலில் சாய்ந்த கிடந்த மின்கம்பத்தில் சென்ற மின்கம்பியை மாடுகள் மிதித்துள்ளன. இதனால் மாடுகளை மின்சாரம் தாக்கியது. இதில் 2 பசுமாடுகளும், கன்றுக்குட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் அங்கு வந்து பார்த்தனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 2 பசுமாடு, ஒரு கன்று குட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×