என் மலர்
அரியலூர்
அரியலூர் அருகே கார் சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதியதில் சென்னையை சேர்ந்த வங்கி ஊழியர் பலியானார்.
ஜெயங்கொண்டம்:
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது43). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 5 வயது மகனை அழைத்துக் கொண்டு தனது காரில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். காரை நடராஜன் ஓட்டிவந்துள்ளார்.
அரியலூர் அருகே வாரணவாசி மருதையாற்று பாலம் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த நடராஜன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். காயமடைந்த அவரது 5 வயது மகன் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிமாவட்ட லாரிகளுக்கும் மணல் ஏற்றி செல்ல முன்னுரிமை வழங்ககோரி ஜெயங்கொண்டம் அருகே மணல் லாரி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தெதன்கச்சி பெருமாள் நத்தம் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து மணல் எடுக்க வரும் சென்னை, நாகப்பட்டினம், சேலம், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வெளி மாவட்ட லாரிகள், அருகேயுள்ள கோடங்குடி கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வரிசையாக குவாரியில் லாரிகளின் மூலம் ஏற்றி மணல் சப்ளை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர், தஞ்சை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு லாரிகளில் மணல் ஏற்ற தாமதம் செய்வதால் 1000-க்கணக்கான லாரிகள் வாரக்கணக்கில் நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளது. இதானால் ஆத்திரமடைந்த பிற வெளிமாவட்ட லாரி ஓட்டுநர்கள் சென்னை -கும்ப கோணம் சாலையில் லாரிகளை நிறுத்தியும்,சாலையில் அமர்ந்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பொதுத்பணித்துறை உதவி பொறியாளர் தியாகராஜன் மற்றும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி ஆகியோர் மறியல் செய்த ஓட்டுநர்களிடம் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
ஆனால், ஓட்டுநர்கள் தாங்கள் நீண்ட தொலைவிலிருந்து வருவதால் தங்களுக்கு கால விரயம் மற்றும் பொருள் விரயம் ஏற்படுகின்றது. மேலும், லாரிகளை நிறுத்துவதற்க்காக நாள் ஒன்றுக்கு 150 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பதால் ஓட்டுநர்களின் கையிலிருக்கும் தொகை முழுவதும் செலவாகி விடுகின்றது. மேலும் லாரிகளை நிறுத்தி வைக்கும் இடத்தில் குடிநீர், ஹோட்டல் மற்றும் குளிக்கும் வசதி இல்லாததால் மிகவும் சிரமபட்டு வருவதால் வெளிமாவட்ட லாரிகளுக்கும் மணல் ஏற்றி செல்ல முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்தால்தான் போராட்டத்தினை கைவிடுவதாக கூறினர். பின்னர் லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகள் ,அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வெளி மாவட்ட ஓட்டுநர்களின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தினால் சென்னை - கும்பகோணம் சாலையில் சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம் 93.33 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் தேர்வெழுதிய 11241 பேரில் மாணவர்கள் 4911 பேரும், மாணவிகள் 5580 பேரும் சேர்த்து 10491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.33 சதவீதமாகும். அரசு பள்ளிகளின் தேர்ச்சி 90 சதவீதமாகும். 27 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் 62 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 2015-ம் ஆண்டு 90.70 சதவீதமும், 2016-ம் ஆண்டு 92.52 சதவீதமும், தற்போது 93.33 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டம் ஆண்டுக்கு ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சதவீதம் அதிகரித்து வருவது பெற்றோர் மற்றும் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் 94.98 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இது தேர்ச்சி சதவீதம் அடிப்படையில் மாநில அளவில் 17-வது இடத்தை பிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 136 பள்ளிகளைச் சேர்ந்த 9,764 மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். சாதனை படைத்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

செந்துறை அருகே நண்பர்களுடன் குடிக்க சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் அகத்தியா (வயது 15). இவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
தற்போது விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றான். அங்கு குளத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நிந்தி சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அகத்தியா தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.
பின்னர் அவனை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து காப்பாற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அகத்தியா பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து இரும்புலி குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்று 10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் நிலையில் அகத்தியா இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமானூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்துள்ள காரைபாக்கத்தில் சாலையோரம் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில் அந்த டாஸ்மாக் கடை பாளையபாடி சாலையில் ஒரு வயல் பகுதிக்கு மாற்றப்பட்டு, அங்கு இயங்கி வந்தது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் பொதுமக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று திருமானூர் அருகே உள்ள மஞ்சமேடு மற்றும் காரைபாக்கம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மஞ்சமேடு, காரைபாக்கம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று டாஸ்மாக் கடையை மூடக்கோரி, டாஸ்மாக் கடையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்ய மினி பஸ் ஒன்றை கொண்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீசார், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக்கூறி கடையின் மீது கற்களை வீசினர். இதில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் கோவிந்தராஜன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தாசில்தார் கோவிந்தராஜன் இனி இந்த டாஸ்மாக் கடை இங்கு இயங்காது என்று உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன் தலைமையிலான சிறப்பு பள்ளி பாதுகாப்பு கூட்டுக்குழு ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி சாதனங்கள், தீயணைப்பு கருவிகள், ஆபத்துகால சிறப்பு வழிகள், மற்றும் சமிக்கை கருவிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,
இந்த ஆய்வில் உள்ள 39 பள்ளிகளுக்கு சொந்தமான 160 வாகனங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இன்று நடத்தப்படும் சோதனையில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவ்வாகனம் நிராகரிக்கப்படும் எனவும் குறைபாடுகள் சீர்செய்து மறுஆய்வுக்குப்பின் தகுதி உறுதி செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அந்த வாகனம் மாணவர்களை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் தெரிவித்தார்.

சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்காததால் காவலாளியை அ.தி.மு.க. பிரமுகர் தாக்கியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் ஊராட்சி முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது36). இவர் செந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.
இவர் கடந்த 12.5.17 அன்று தாமரைப்பூண்டியில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது பணியில் இருந்த கடலூர் இரவாங்குடியை சேர்ந்த நாராயணசாமி (52) அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த சுரேஷ் பணியில் இருந்த காவலாளி நாராயணசாமியை தாக்கினார்.
இதில் நாராயணசாமி காயமடைந்தார். இது குறித்து தனியார் செக்கியூரிட்டி நிர்வாகம் குவாகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ், சுரேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரியலூர் அருகே குடிநீர் கேட்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் கள்ளுர் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக குடிநீர் சரியாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தியும், கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டியும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் காலிகுடங்களுடன் அரியலூர் - தஞ்சாவூர் சாலையில் கள்ளுர் பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் டி.எஸ்.பி (பொறுப்பு) சோமசேகர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் கிராமத்தில் தண்ணீர் உள்ள இடம் கண்டறிந்து ஆழ்துளை கிணறு அமைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும். மேலும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க உரிய முன்மொழிவுகள் தயார் செய்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் தஞ்சாவூர்-அரியலூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டது.

கள்ளூர் கிராமத்தில் சீராக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கள்ளூர் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதமாக அப்பகுதி பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் அரியலூர்-தஞ்சாவூர் சாலையில் விரகாலூர் பஸ் நிறுத்தம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை மாற்று பாதையில் இயக்க முயற்சித்த போது பஸ்சின் அடியில் சிலர் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சோமசேகர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், விரைவில் கிராமத்தில் தண்ணீர் உள்ள இடம் கண்டறிந்து ஆழ்துளை கிணறு அமைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும். மேலும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்குவது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தெரிவிக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சட்ட விழிப்புணர்வு அமைப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரனிடம், சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் மாநில தலைவர் சங்கர் கோரிக்கை மனு அளித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 10 சிமென்ட் ஆலைகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட கனிம சுரங்கங்களினால் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்து, சுகாதாரம், நீர், நிலம், காற்று மாசடைந்து வருகிறது.
இந்நிலையில்,அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இது குறித்து, அரியலூர் மாவட்ட மக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்கமோ கருத்தோ கேட்கப்படவில்லை.
எனவே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால், மக்கள் வாழத்தகுதியற்ற மாவட்டமாக மாறிவிடும். எனவே ஹைட்ரோ கார்பன் பணிகளை உடனே தடை செய்ய உத்தரவிட வேண்டும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பொன்னேரி கரையில் டாஸ்மாக் கடைஅமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே மாமன்னன் ராஜேந்திரசோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்ற பொன்னேரியிலிருந்து பிச்சனூர் செல்லும் சாலையில் கரை ஓரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகளால் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த இடத்தில் இரவு நேரங்களில் வெளியூர்களிலிருந்து வரும் பொதுமக்கள் பேருந்திலிருந்து இறங்கி பிச்சனூர், பூவாயிகுளம், கொக்கரனை, இடைக்கட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு நடந்து செல்லும் பாதையாக உள்ளது.
இதனால் பலவிதமான பிரச்னைகளும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் என கூறி பொன்னேரியை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், சிறுவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மீண்டும் கடை திறக்கப்பட்டால் பெரிய அளவிலான போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பூவாயிகுளம் கண்ணன் தலைமைவகித்தார். குருவாலப்பர்கோவில் முல்லைநாதன் துவக்கி வைத்தார். அண்ணாதுரை, உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் குருவாலப்பர்கோவில் ராமதாஸ் நன்றி கூறினார்.

செந்துறையில் 3-வது நாளாக நடந்த போராட்டத்தின்போது டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை பெண்கள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் அருகே இருந்த டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த மார்ச் மாதம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் ராயல் சிட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் மனுவும் அளித்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் செந்துறை போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து சிலர் அங்கிருந்து சென்றனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமமக்கள் கடையை முற்றுகையிட்டு 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் ஊழியர்கள், பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளர் சித்ரா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்றினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள். அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அதைத்தொடர்ந்து கிராமமக்கள் கடை முன்பு துடைப்பம் மற்றும் செருப்புகளை கட்டி தொங்கவிட்டுவிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுத்தியல் மற்றும் கடப்பாரையுடன் பெண்கள் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்தனர். பின்னர் கடையின் உள்ளே இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை எவ்வித சேதாரமும் இன்றி அப்புறப்படுத்தி, சாலையில் கொண்டு வந்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் ஊழியர்கள், செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் டாஸ்மாக் ஊழியர்கள் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி ஆர்.எஸ்.மாத்தூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கொண்டு சென்றனர்.
இந்த போராட்டம் குறித்து பெண்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் அப்புறப்படுத்தி கடையை காலி செய்துள்ளோம். மீண்டும் அதிகாரிகள் இந்த இடத்தில் கடை திறக்க முயன்றால் கட்டிடத்தையே இடித்து தரைமட்டமாக்குவோம் என்று ஆவேசத்துடன் கூறினார்கள். மேலும் சிலர் அங்கேயே இருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை பெண்கள் அப்புறப்படுத்திய சம்பவத்தால் செந்துறையில் பரபரப்பு ஏற்பட்டது.