என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலி
    X

    செந்துறை அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலி

    செந்துறை அருகே நண்பர்களுடன் குடிக்க சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகன் அகத்தியா (வயது 15). இவன்  அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தற்போது விடுமுறை என்பதால் தனது  நண்பர்களுடன் அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றான். அங்கு குளத்தின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு நிந்தி சென்றனர். அப்போது  ஆழமான பகுதிக்கு சென்ற  அகத்தியா தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான்.

    பின்னர் அவனை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து காப்பாற்றி  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள்  தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அகத்தியா பரிதாபமாக இறந்தான். 

    இது குறித்து இரும்புலி குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இன்று 10-ம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் நிலையில் அகத்தியா இறந்தது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×