search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk member"

    • சேர்க்கை படிவங்களை உடுமலை கே .ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
    • எஸ் .எம். நாகராஜ், வி .ஆர். வி. வேலுச்சாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே .ராதாகிருஷ்ணன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் பிரனேஷ் மற்றும் முருகேசன், அன்புராஜன், பொள்ளாச்சி ஒன்றிய செயலாளர்கள் ஆவல்பட்டி நடராஜ், இளஞ்செழியன், சோமசுந்தரம் ,சின்ன பாலு, பேரூராட்சி செயலாளர்கள் நரி முருகன் ,சுந்தர்ராஜ், எஸ்.கே., சித்ரா, பல்லடம் ஒன்றிய செயலாளர் சித்தி ராஜ், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, சிவப்பிரகாசம் ,மாவட்ட ஆவின் சேர்மன் வழக்கறிஞர் மனோகரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் ஆறுமுகம் ,அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் எஸ் .எம். நாகராஜ், வி .ஆர். வி. வேலுச்சாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அதிமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது45). அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது பெரியாம்பட்டியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார்.

    அங்கு ரூ.20 ஆயிரம் எடுத்து விட்டு வண்டியை எடுப்பதற்காக வெளியே வந்தார். அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு சீட்டை காட்டி முகவரி கேட்பது போல் நடித்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டினர்.

    பின்னர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து மர்ம நபர்கள் ரூ.20 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் பறிமுதல் செய்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பித்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி காரிமங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னாள் பஞ்சாயத்து தலைவரிடம் கத்தி முனையில் மர்ம நபர்கள் அவரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மணலில் ரூ.10 லட்சம் கேட்டு தனியார் நிறுவன ஊழியரை கடத்தியதாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மாதவரம்:

    எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரவீன். அதே பகுதியில் உள்ள தீபா என்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

    இவர் மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மணலி சி.பி.சி.எல். நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து மூன்று வருடங்களாக தொழில் செய்து வருகிறேன். சில தினங்களுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட ஆட்கள் எங்களது நிறுவன ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து, “ஒழுங்காக தொழில் செய்ய வேண்டும் என்றால் திருவொற்றியூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணணுக்கு மாமூல் தர வேண்டும் என்று மிரட்டினர்.

    மணலி காமராஜர் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் சிந்தூர்கனி செட்டி என்பவரை 4 பேர் தொலைபேசி மூலம் வெளியே வரும்படி அழைத்தனர்.

    பின்னர் பகுதி செயலாளர் கிருஷ்ணன் அழைத்து வரச் சொன்னார் என்று கூறி அவர்களது மோட்டார் சைக்கிளில் சிந்தூர்கனி செட்டியை கடத்தி சென்று விட்டனர்.

    அவரை விடுவிக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்கள். பணம் கொண்டு வந்தால் விடுவிப்பதாக கூறுகிறார்கள்.

    எனவே எங்கள் ஊழியரை கடத்திய பகுதி செயலாளர் கிருஷ்ணன் மீதும் அவரது அடியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் பிரவீன் கூறி உள்ளார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை செய்து வந்தார். இதற்கிடையே கடத்த பட்டதாக கூறப்பட்ட சிந்தூர்கனி செட்டி ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்தார். அப்போது தன்னை கடத்தியவர்களே விடுவித்து விட்டார்கள் என்று கூறினார்.

    இதுபற்றி அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சிந்தூர்கனி செட்டியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மணலி பெரிய தோப்பு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ், வினோத், மணிகண்டன் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    சென்னை திருவல்லிக்கேணியில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடித்தால் டி.வி., வாஷிங்மெஷின் இலவசம் என மதுபிரியர்களுக்கு தீபாவளி சலுகை அறிவித்த அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரிகள் தங்கள் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கிறார்கள்.

    அதிக தொகைக்கு பொருட்களை வாங்கினால் பரிசு என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை மிகவும் கவர்கிறது. இதனால் துணி, நகை, வீட்டு உபயோகப்பொருட்கள், பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது.

    இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகை காலங்களில் மது விற்பனையும் அதிகரிக்கும். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தநிலையில் ஆயிரம் ரூபாய்க்கு மது அருந்தினால் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு ஓட்டல், பார் ஆகியவற்றில் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் 32 அங்குல கலர்டிவி, குளிர் சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் ஆகியவை வழங்கப்படும் என்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்ற வசனத்துடன் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வல்லபா அக்ரஹாரம் ஆகிய இடங்களில் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரம் ரூபாய்க்கு மது குடிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களின் படங்கள் மற்றும் ஓட்டல் பெயருடன் கூடிய வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசில் பொதுமக்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து, விளம்பர பேனர் வைத்திருந்த பார் மானேஜர் வின்சென்ட் ராஜ் (25), பார் அதிபரின் உதவியாளர் ரியாஸ் அகமது (41) ஆகியோரை ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர்.

    பார் உரிமையாளர் முகமது அலிஜின்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலரான இவர் தற்போது சேப்பாக்கம் சிறுபான்மை பிரிவு அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

    மதுஅருந்துவோருக்கு குலுக்கல் முறையில் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. டி.வி, வாஷிங்மெஷின், குளிர்சாதனபெட்டி, பரிசு குலுக்கலுக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
    மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கவேண்டும் என அதிமுக நிர்வாகி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். #Sterlite #ThoothukudiProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22‍-ந்தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்ப‌ட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனு அளித்து வருகிறார்கள். இதனிடையே தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி மக்கள் சார்பாக முன்னாள் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர்.



    முதலமைச்சரின் தனிப்பிரிவில் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை சில சமூக விரோதிகளின் பொய் பிரசாரத்தால் மக்களின் எண்ணத்தை பாதிக்கும் வகையில் எங்கள் கிராம மக்களின் கருத்துக்கு மாறாக மூடப்ப‌ட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் எங்கள் பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைகளை இழந்து அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்ப‌ட்டு உள்ளது.

    நாங்கள் விவசாயம் செய்யும் சூழ்நிலையும், வசதியும் இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம். இந்த தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் நிறைவேறும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Sterlite #ThoothukudiProtest
    விவசாயி கொலை வழக்கில் வத்தலக்குண்டு அ.தி.மு.க நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    வத்தலக்குண்டு விராலிபட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகளை அப்பகுதியை சேர்ந்த சிலர் கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் இருதரப்பிற்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் அழகர்சாமி தரப்பினர் சுப்புராஜ் தரப்பை சேர்ந்த ராஜா அழகர்சாமியை (வயது32) அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

    இதுதொடர்பாக அழசர்சாமி, அவரது மகன் சதீஸ்குமார், தெய்வேந்திரன், ரவிச்சந்திரன், நாகராஜன், ராமசாமி, சுதாகர் ஆகிய 7 பேர் மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதில் சுதாகர் அ.தி.மு.க மாணவரணி ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோது ராமசாமி இறந்துவிட்டார். திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகரன் வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #tamilnews
    சீர்காழியில் அ.தி.மு.க பிரமுகரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள சம்பூராயர் கோடங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. அ.தி.மு.க பிரமுகர். இவர் நேற்று சம்பூராயர் கோடங்குடியில் இருந்து சீர்காழிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெம்மேலி அருகே கார் சென்று கொண்டிருந்த போது கையில் உருட்டு கட்டை, கற்ளை வைத்து கொண்டு 3 நபர்கள் காரை வழிமறித்தனர். 

    உடனே அதிர்ச்சியுடன் ராஜதுரை காரை நிறுத்தினார். தொடர்ந்து 3 நபர்களும் கையில் வைத்திருந்த உருட்டு கட்டை மற்றும் கற்கலால் கார் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் ராஜதுரைக்கு காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.

    ×