எந்த சிக்னலும் கொடுக்காத தி.மு.க... அ.தி.மு.க.வில் இணைந்த மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்!

2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார். அதிமுக, பாஜக தரப்பில் இருந்து அழைப்புகள் வந்தநிலையில் திமுகவில் சேர விருப்பம் காட்டியுள்ளார் மன்னன்.
எந்த சிக்னலும் கொடுக்காத தி.மு.க... அ.தி.மு.க.வில் இணைந்த மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்!
Published on

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டிவருகின்றனர். ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடக்க, மறுபக்கம் அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் வேறுகட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.

அந்த வகையில் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளரான மன்னன் இன்று திமுகவில் இணைந்துள்ளார். கட்சியில் இருந்த காலக்கட்டத்தில் மதுரை திமுக என்றாலே அழகிரியின் கோட்டை எனக்கூறிவந்தார்கள். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து அந்த சாம்ராஜ்யம் சரிந்தது. ஆனால் அப்போதிலிருந்து அவரின் வலது கரமாக இருந்தவர் தான் பி.எம்.மன்னன்.

கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார். அப்போதும் அவருடன் இருந்தவர் மன்னன். இந்நிலையில் கடந்தவாரம் முதல் இவர் அதிமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து இன்று பி.எம்.மன்னன் அவரது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

நீண்ட நாட்களாக அதிமுக, பாஜக தரப்பில் இருந்து அழைப்புகள் வந்தநிலையில் திமுகவில் சேர விருப்பம் காட்டியுள்ளார் மன்னன். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடமும் தெரிவித்துள்ளார். ஆனால் திமுகவில் தரப்பில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காத நிலையில் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com