என் மலர்
செய்திகள்

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை அப்புறப்படுத்திய பெண்கள்
செந்துறையில் 3-வது நாளாக நடந்த போராட்டத்தின்போது டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை பெண்கள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகம் அருகே இருந்த டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த மார்ச் மாதம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் ராயல் சிட்டி குடியிருப்பு பகுதியில் தனியார் இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் கலெக்டர் சரவணவேல்ராஜிடம் மனுவும் அளித்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் செந்துறை போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து சிலர் அங்கிருந்து சென்றனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமமக்கள் கடையை முற்றுகையிட்டு 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் ஊழியர்கள், பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளர் சித்ரா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்றினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள். அதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
அதைத்தொடர்ந்து கிராமமக்கள் கடை முன்பு துடைப்பம் மற்றும் செருப்புகளை கட்டி தொங்கவிட்டுவிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுத்தியல் மற்றும் கடப்பாரையுடன் பெண்கள் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்தனர். பின்னர் கடையின் உள்ளே இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை எவ்வித சேதாரமும் இன்றி அப்புறப்படுத்தி, சாலையில் கொண்டு வந்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் ஊழியர்கள், செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் டாஸ்மாக் ஊழியர்கள் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை லாரியில் ஏற்றி ஆர்.எஸ்.மாத்தூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கொண்டு சென்றனர்.
இந்த போராட்டம் குறித்து பெண்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை எவ்வித சேதாரமும் இல்லாமல் அப்புறப்படுத்தி கடையை காலி செய்துள்ளோம். மீண்டும் அதிகாரிகள் இந்த இடத்தில் கடை திறக்க முயன்றால் கட்டிடத்தையே இடித்து தரைமட்டமாக்குவோம் என்று ஆவேசத்துடன் கூறினார்கள். மேலும் சிலர் அங்கேயே இருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை பெண்கள் அப்புறப்படுத்திய சம்பவத்தால் செந்துறையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story