என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே காவலாளியை தாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்காததால் காவலாளியை அ.தி.மு.க. பிரமுகர் தாக்கியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் ஊராட்சி முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது36). இவர் செந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.
இவர் கடந்த 12.5.17 அன்று தாமரைப்பூண்டியில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது பணியில் இருந்த கடலூர் இரவாங்குடியை சேர்ந்த நாராயணசாமி (52) அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த சுரேஷ் பணியில் இருந்த காவலாளி நாராயணசாமியை தாக்கினார்.
இதில் நாராயணசாமி காயமடைந்தார். இது குறித்து தனியார் செக்கியூரிட்டி நிர்வாகம் குவாகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ், சுரேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story