என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே மணல் லாரி டிரைவர்கள் சாலை மறியல்
    X

    ஜெயங்கொண்டம் அருகே மணல் லாரி டிரைவர்கள் சாலை மறியல்

    வெளிமாவட்ட லாரிகளுக்கும் மணல் ஏற்றி செல்ல முன்னுரிமை வழங்ககோரி ஜெயங்கொண்டம் அருகே மணல் லாரி டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தெதன்கச்சி பெருமாள் நத்தம் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து மணல் எடுக்க வரும் சென்னை, நாகப்பட்டினம், சேலம், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வெளி மாவட்ட லாரிகள், அருகேயுள்ள கோடங்குடி கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வரிசையாக குவாரியில் லாரிகளின் மூலம் ஏற்றி மணல் சப்ளை செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அரியலூர், தஞ்சை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு லாரிகளில் மணல் ஏற்ற தாமதம் செய்வதால் 1000-க்கணக்கான லாரிகள் வாரக்கணக்கில் நிறுத்தியே வைக்கப்பட்டுள்ளது. இதானால் ஆத்திரமடைந்த பிற வெளிமாவட்ட லாரி ஓட்டுநர்கள் சென்னை -கும்ப கோணம் சாலையில் லாரிகளை நிறுத்தியும்,சாலையில் அமர்ந்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பொதுத்பணித்துறை உதவி பொறியாளர் தியாகராஜன் மற்றும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி ஆகியோர் மறியல் செய்த ஓட்டுநர்களிடம் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

    ஆனால், ஓட்டுநர்கள் தாங்கள் நீண்ட தொலைவிலிருந்து வருவதால் தங்களுக்கு கால விரயம் மற்றும் பொருள் விரயம் ஏற்படுகின்றது. மேலும், லாரிகளை நிறுத்துவதற்க்காக நாள் ஒன்றுக்கு 150 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிப்பதால் ஓட்டுநர்களின் கையிலிருக்கும் தொகை முழுவதும் செலவாகி விடுகின்றது. மேலும் லாரிகளை நிறுத்தி வைக்கும் இடத்தில் குடிநீர், ஹோட்டல் மற்றும் குளிக்கும் வசதி இல்லாததால் மிகவும் சிரமபட்டு வருவதால் வெளிமாவட்ட லாரிகளுக்கும் மணல் ஏற்றி செல்ல முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்தால்தான் போராட்டத்தினை கைவிடுவதாக கூறினர். பின்னர் லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகள் ,அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வெளி மாவட்ட ஓட்டுநர்களின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தினால் சென்னை - கும்பகோணம் சாலையில் சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×