என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சாரல் மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சாரல் மழை பெய்ததது.
  பரமத்தி வேலூர்:

   நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், குப்பிரிக்காபாளையம், பெருங்குறிஞ்சி, குறும்பலமகாதேவி, ஜமீன்இளம்பள்ளி, தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில், கொந்தளம், பிலிக்கல்பாளையம், சேளூர், குன்னத்தூர், கோப்பணம்பாளையம், இருக்கூர், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர், பரமத்தி, கபிலர்மலை, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்த இடி, மின்னலுடன் கூடிய சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. 

  அதேபோல் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான பயிர்கள் அதிக வெயிலில் தாக்கத்தின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. கனமழையின் காரணமாக வாடிய பயிர் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

  மேலும் மாலை 6 மணிக்கு மழை பெய்ததால் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த பலகார கடைகள் ,துணிக்கடைகள், மண்பாண்ட கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், உணவு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். 

  வெளியூர்களுக்கு சென்று திரும்பிய இரு சக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் கூலி வேலைக்கு சென்று மாலை நேரத்தில் திரும்பியவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
  Next Story
  ×