என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சேலம் காளியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
சேலம் காளியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டனர்.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி காலனி பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த 6-ந் தேதி வழக்கம் போல் பூஜை நடந்தது. இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி சரவணன் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று அப்பகுதி மக்கள் கோவிலுக்கு சென்றபோது கோவிலின் வெளி கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது கோவிலில் பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என தெரியவந்தது.
இதுபற்றி பூசாரி சரவணன் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலின் கதவின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்,
Next Story