search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    .
    X
    .

    திருச்சியை சேர்ந்தவரிடம் கடன் தருவதாக கூறி ரூ.6.90 லட்சம் மோசடி

    ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி திருச்சியை சேர்ந்தவரிடம் ரூ.6.90 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    சேலம்:

    திருச்சி மாவட்டம் துறையூர் சோபனபுரம் ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 44).இவர் சேலம் கன்னங்குறிச்சி எழில் நகர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவரிடம் தனது நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு ரூ.1 கோடி கடன் கேட்டுள்ளார்.

    பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட திருநா–வுக்கரசு டாக்குமெண்ட் சார்ஜ் ரூ.6 லட்சத்து 89 ஆயிரத்து 500 பெற்றார். ஆனால் பேசியபடி ரூ.1 கோடி கடன் தொகையை  தராமல் அலைக்கழித்து வந்துள்ளார்.

    இந்த மோசடிக்கு  சிவா, சரவணன், வைத்தீஸ்வரன், ரங்கநாதன், மோகன் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் கொடுத்த பணத்தை இந்த கும்பலிடம் கேட்டுள்ளார். பணத்தை தர மறுத்த 6 பேரும் கண்ணனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்ர்கள்.

    இது குறித்து கண்ணன் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
    Next Story
    ×