search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 persons"

    • சங்ககிரி பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக சங்ககிரி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 3,400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    சங்ககிரி:

    சங்ககிரி பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் சூதாட்டம் நடப்பதாக சங்ககிரி டி.எஸ்.பி., ஆரோக்கியராஜிக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ராமன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் போலீசாருடன் அப்பகுதிக்கு சென்று சோதனை யிட்டனர். அப்போது, சூதாட்டம் விளையாடிக கொண்டிருந்த அப் பகுதியைச் சேர்ந்த சந்திரபோஸ் (வயது 44), நலப்பநாயக்கன் தெருவைச் சேர்ந்த மணி (27), அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (28), ராஜேந்திரன் (35), விஜயகுமார் (31), குப்ப னூரை சேர்ந்த நவீன் (28) ஆகிய 6 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் 3,400 ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி ஊராட்சி செங்கனூர் பகுதியை சேர்ந்தவர் வாலிபர் கொலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பாகல்பட்டி ஊராட்சி செங்கனூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீதர்(வயது 26). இவர் தனது நண்பர்களுடன் கடந்த டிசம்பர் 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாடிய கொண்டிருந்த பொழுது அவர் தரப்பினருக்கும் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் சிலருக்கும் முன்விரோதம் காரணமாக கை களைப்பு ஏற்பட்டது.

    இதில் ஸ்ரீதர் ஒருசிலரால் தாக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைதொடர்ந்து ஸ்ரீதர் கொலை வழக்கு சம்பந்தமாக ஓமலூர் போலீசார் முதல் கட்டமாக விக்ரம் மற்றும் மோகன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதில் மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக், லித்திஷ், கோகுல், மற்றொரு கார்த்திக், பெருமாள் மற்றும் நித்திஷ்கண்ணன், ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • தகவலின் பேரில் முதியவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெட்ரோல் பங்க் பாலம் அடியில், திருவள்ளுவர் திருமண மண்டப வீதி, மற்றும் தம்மண்ணன வீதி ஆகிய பகுதிகளில் மொபைல் போன் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை அனுப்பி, அதன் ரிசல்ட் பார்த்து தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குமாரபாளையம் தம்மண்ணன் வீதியை சேர்ந்த லோகநாதன்(வயது 77), ஈரோடு ரமேஷ்( 25), பள்ளிபாளையம் தினேஷ்குமார்(30), குமாரபாளையம் வெங்கடேசன்(34), ஈஸ்வரமூர்த்தி(36), அல்லிமுத்து(57) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 மொபைல் போன்களும், லோகநாதனிடம் கேரளா லாட்டரி என்று விற்ற போலி லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  

    ×