என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  நீதிமன்றத்திற்கு புதிய நீதித்துறை நடுவர் நியமனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாழப்பாடி நீதிமன்றத்திற்கு புதிய நீதித்துறை நடுவர் நியமனம்
  வாழப்பாடி:

  வாழப்பாடி பகுதி வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட அரசுத்துறையினரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, 2017 நவம்பர் 12 ல், வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

  இந்த நீதிமன்றத்தின் முதலாவது நீதித்துறை நடுவராக சந்தோஷம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்த நீதித்துறை நடுவர் சந்தோஷம், கடந்தாண்டு ஜூன் மாதம் இடமாறுதல் பெற்றுச் சென்றார். இதனையடுத்து, கடந்த 9 மாதங்களாக ஆத்துார் விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் தனலட்சுமி, வாழப்பாடி நீதிமன்ற நடுவராக கூடுதல் பொறுப்பு வகித்து, வழக்குகளை கையாண்டு வந்தார்.

  இந்நிலையில், தற்போது பண்ருட்டி நீதித்துறை நடுவர் சன்மதி, வாழப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

  வாழப்பாடி நீதிமன்றத்திற்கு புதிய நீதித்துறை நடுவர் நியமிக்கப்பட்டதற்கு, வக்கீல்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×