என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  ரோட்டில் கிடந்த 350 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் அருகே ரோட்டில் கிடந்த 350 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  மேட்டூர்:

  மேட்டூரை அடுத்த கருமலைக்கூடல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக மேட்டூர் வட்ட வழங்கல் அதிகாரி கார்த்திக்கு தகவல் கிடைத்தது. 

  இதனை அடுத்து கார்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் வேணுகோபால், சுதா லட்சுமி ஆகியோர் கருமலைக்கூடல் கண்ணையன் தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பார்த்தனர்.

  அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையில் சிறிய சிறிய மூட்டையாகக் கட்டப்பட்டு கிடந்த ரேசன் அரிசியை  பறிமுதல் செய்த அதிகாரிகள் எடை போட்டுப் பார்த்ததில் 350 கிலோ இருந்தது. 

  இதனையடுத்து குஞ்சாண்டியூரில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு எடுத்துச் சென்று ரேஷன் அரிசி மூட்டைகளை ஒப்படைத்தனர். 
  மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×