என் மலர்

  செய்திகள்

  ஜெயக்குமார்
  X
  ஜெயக்குமார்

  இழப்பு அவர்களுக்குத்தான்... கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது பற்றி ஜெயக்குமார் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
  சென்னை:

  தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாமக, தற்போது 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.  இதற்காக விருப்ப மனுக்களையும் பெறத் தொடங்கி உள்ளது. கூட்டணியை திடீரென பாமக முறித்துக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பாமக தனித்துப் போட்டி என்பது அவர்கள் கட்சி எடுத்த முடிவு, அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றார்.

  ‘பாமக எடுத்த முடிவினால் அவர்களுக்கு தான் இழப்பு. அதேசமயம் அதிமுகவை விமர்சனம் செய்வது என்பதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம்’ என்றும் ஜெயக்குமார் கூறினார்.

  ‘கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான், தேவையெனில் போட்டுக் கொள்வோம், இல்லையெனில் கழற்றி வைத்துவிடுவோம். கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை’ என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
  Next Story
  ×