search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை திருமணம்
    X
    குழந்தை திருமணம்

    குழந்தை திருமணம் நடத்தி வைத்தால் 2 ஆண்டு ஜெயில்-ரூ.1 லட்சம் அபராதம்

    பரமக்குடி, நயினார்கோவில், கமுதி, கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி ஆகிய பகுதிகளில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 6 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட சமூகநல அலுவலர், சைல்டு லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் குழந்தை நலக்குழு ஆகியோர் ஒருங்கிணைந்து குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    பரமக்குடி, நயினார்கோவில், கமுதி, கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி ஆகிய பகுதிகளில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 6 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, வழக்குப்பதிவு செய்யப்படும் நபர்களுக்கு 2 ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத கடுங்காவல் தண்டணை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.

    கிராம ஊர் தலைவர்கள், ஊராட்சிமன்ற தலைவர், சமூக அளவிலான சங்கங்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் உட்பட தன்னார்வலர்கள் அனைவரும் குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். குழந்தைத் திருமணம் என்பது சட்டப்படி குற்றமாகும். எனவே, குழந்தைத் திருமணங்களை நடத்தும் பெற்றோர் மணமகன், மணமகள் வீட்டார், திருமணத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×