search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    சென்னை:

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து மதுரை தோப்பூரில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்காததால் அங்கு விரைந்து பணிகளை தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். 

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27.1.2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி

    இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்திக் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்கான நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும்” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

    Next Story
    ×