search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்
    X
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்

    ஸ்டெர்லைட் ஆலையால் 35 டன் ஆக்சிஜனை உடனே தயாரிக்க முடியும்

    ஸ்டெர்லைட் ஆலையால் தினமும் 1050 டன் ஆக்சிஜனை திரவ வடிவில் உற்பத்தி செய்ய முடியும். உடனடியாக 35 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் தயார் நிலையில் கட்டமைப்புகள் இருக்கின்றன.
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்களுக்கு தற்காலிகமாக திறக்க அனுமதிக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் பட்சத்தில், ஆக்சிஜன் உற்பத்தியை எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் தினமும் 1050 டன் ஆக்சிஜனை திரவ வடிவில் உற்பத்தி செய்ய முடியும். உடனடியாக 35 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் வகையில் தயார் நிலையில் கட்டமைப்புகள் இருக்கின்றன. எனவே, உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜன் சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடியும்.
    Next Story
    ×