search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குக செல்வம்
    X
    குக செல்வம்

    திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

    ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கு.க. செல்வம். திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார்.

    கு.க.செல்வம் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×