என் மலர்

  செய்திகள்

  தலைமை செயலகம்
  X
  தலைமை செயலகம்

  மே 2ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்- ஊரடங்கு குறித்து முக்கிய ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
  சென்னை:

  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 36 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

  இதனால் ஊரடங்கு  மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் இருக்குமா? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

  இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

  ஏற்கனவே நிபுணர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×