search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நாங்குநேரி அருகே காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல்: தந்தை-மகன்கள் மீது வழக்கு

    நாங்குநேரி அருகே காண்டிராக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தந்தை மற்றும் மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    களக்காடு:

    பாளை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் அரசு காண்டிராக்டராக உள்ளார். இவரிடம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சியை சேர்ந்த திரவியம் என்பவர் தனது நிலம் விற்பனைக்கு உள்ளதாக கூறியுள்ளார். அதனை வாங்க ராஜேந்திரன் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் முன் பணமாக கொடுத்தார். அதன்பின் அவர் பத்திர பதிவுக்கான ஏற்பாடுகளை செய்த போது அந்த நிலத்திற்கு செல்லும் பாதை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு இருப்பதை அறிந்தார். எனவே அவர் திரவியத்திடம் நிலம் வேண்டாம், அட்வான்ஸ்சை திருப்பி தாருங்கள் என கேட்டார். ஆனால் திரவியம் அட்வான்ஸ் பணத்தை கொடுக்கவில்லை.

    சம்பவத்தன்று நாங்குநேரி டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த திரவியத்திடம் சென்று ராஜேந்திரன் பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு திரவியமும், அவரது மகன் பேச்சிமுத்துவும் சேர்ந்து பணத்தை திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    மேலும் திரவியம் தனது இன்னொரு மகன் வானு மாமலை சென்னையில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி பொய் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுபற்றி ராஜேந்திரன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இதுதொடர்பாக திரவியம், அவரது மகன்கள் வானுமாமலை, பேச்சிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×