என் மலர்

  செய்திகள்

  க அன்பழகன்
  X
  க அன்பழகன்

  க. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  சென்னை:

  தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (98). உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 24-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றும், இன்றும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது உடல்நிலை குறித்து டாக்டர்கள் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி கூறினார்கள்.

  செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், நேற்று இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

  அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

  அன்பழகன் உடல்நிலை மோசமானதை கேள்விப்பட்டதும் தி.மு.க. நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்துள்ளனர். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்து உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தனர்.
  Next Story
  ×