search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "க அன்பழகன்"

    • கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக் குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார்.
    • என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    "குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனிவரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள்.

    கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக் குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பள்ளி கல்வி வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
    • நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தொடக்க கல்வி அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்திற்கு டி.பி.ஐ. என்று பெயர் இருந்து வந்தது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவும் அங்கு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அரசின் சார்பில் இப்போது அன்பழகனின் நூற்றாண்டு நினைவு விழா கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் டி.பி.ஐ. முகப்பில் அவரது பெயரில் நூற்றாண்டு வளைவு கட்டி முடிக்கப்பட்டது.

    அந்த வளைவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் திறந்து வைத்தார். மேலும் பள்ளி கல்வி வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டினார். நிகழ்ச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ×