search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    வதந்தி பரப்பி போராட்டத்தை தூண்டிவிட்டனர்- சட்டசபையில் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு

    வண்ணாரப்பேட்டை போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் போராட்டத்தை தூண்டி விட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    சென்னை:

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. இதுபற்றி இன்று சட்டசபையில் விவாதம் நடந்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சட்டசபையில் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பலர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் ஒத்துழைக்க மறுத்து காவல்துறையின் வாகனங்களை சேதப்படுத்தினர். போலீசார் மீது  செருப்பு, கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    சில விஷமிகள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வண்ணாரப்பேட்டை போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் பேராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர். ஆனால் அந்த முதியவர் நோயின் காரணமாகவே இறந்துள்ளார். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல்வரின் பதிலை ஏற்க மறுத்து  திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 
    Next Story
    ×