search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    12 விடுதிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
    X
    12 விடுதிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான 12 விடுதி கட்டிடங்கள்- எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 12 விடுதிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை லேடிவெலிங்டன் வளாகத்தில் 3 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியருக்கான 2 விடுதிக் கட்டிடங்கள், அரியலூர் சுண்டக்குடியில் 91 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதிக் கட்டிடம், கோவைநாயக்கன் பாளையத்தில் 93 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம், புதுக்கோட்டை கீரமங்கலத்தில் 91 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதிக் கட்டிடம், தஞ்சாவூர் திருப்பனந்தாளில் 83 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டிடம்,

    ராமநாதபுரம் திருவரங்கத்தில் 94 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதிக் கட்டிடம், ராமநாதபுரம் கீழத்தூவல் மற்றும் ஆர்.எஸ். மங்கலம் ஆகிய இடங்களில் 1 கோடியே 80 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவியருக்கான 2 விடுதிக் கட்டிடங்கள், சிவகங்கை இடையமேலூர், வேதியரேந்தல் மற்றும் தமராக்கி ஆகிய இடங்களில் 2 கோடியே 50 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர்களுக்கான 3 விடுதிக் கட்டிடங்கள் என மொத்தம் 12 கோடியே 48 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 12 விடுதிக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×