search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதியின் முழுஉருவ வெண்கலசிலை.
    X
    கருணாநிதியின் முழுஉருவ வெண்கலசிலை.

    விழுப்புரத்தில் இன்று கருணாநிதியின் முழுஉருவ வெண்கலசிலை- மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

    விழுப்புரத்தில் இன்று கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலையை தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து ரூ.15 லட்சம் மதிப்பில் 6 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலசிலை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையின் திறப்பு விழா இன்று (20-ந் தேதி) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    இதில் கருணாநிதியின் முழுஉருவ வெண்கல சிலையை தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    அதன்பின்பு விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்டமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பொன்முடி தலைமை தாங்குகிறார்.

    பொது கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    முக ஸ்டாலின்.

    விழுப்புரத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வருவதையொட்டி விழுப்புரம் நகரத்தில் பல இடங்களில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. வரவேற்பு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது.

    விழுப்புரம் - புதுவை சாலை, விழுப்புரம்- விக்கிரவாண்டி சாலை போன்ற இடங்களில் அலங்கார வளைவுகளும், மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலைஞர் அறிவாலயம் முன்பும் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×