search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாமக
    X
    பாமக

    சேலம் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பா.ம.க.வை சேர்ந்த ரேவதி தேர்வு

    சேலம் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பா.ம.க. வை சேர்ந்த ரேவதி என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர்கள், 288 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 385 கிராம ஊராட்சி தலைவர்கள், 3 ஆயிரத்து 597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 4 ஆயிரத்து 299 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 3 பேர், கிராம ஊராட்சி தலைவர்கள் 7 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 392 பேர் என மொத்தம் 403 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    அ.தி.மு.க. கூடுதல் இடங்களில் வெற்றி

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 29 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த 18 பேர், தி.மு.க. 6, பா.ம.க. 4, தே.மு.தி.க.வை சேர்ந்த ஒருவரும் வெற்றி பெற்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 288 ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் அ.தி.மு.க. 131 இடங்களிலும், தி.மு.க. 76 , பா.ம.க. 39 , தே.மு.தி.க. 5, காங்கிரஸ் 4, கம்யூனிஸ்டு 2, ம.தி.மு.க. 1, த.மா.கா.1 சுயேட்சைகள் 29 பேரும் வெற்றி பெற்றனர். 385 கிராம ஊராட்சி தலைவர்கள், 3 ஆயிரத்து 597 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 299 பேர் பதவி ஏற்றனர்.

    பா.ம.க.வை சேர்ந்தவர் தேர்வு

    மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கட்டிடத்தில் நடந்தது. ஏற்கனவே பதவி ஏற்ற மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட ஊராட்சி தலைவரை தேர்வு செய்தனர். இதில் பா.ம.க.வை சேர்ந்த ரேவதி என்பவர் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு 22 ஓட்டுகளும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நல்லம்மாளுக்கு 4 ஓட்டுகள் கிடைத்தன. 3 உறுப்பினர்கள் வரவில்லை.

    Next Story
    ×