search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    கொடைக்கானலில் லேப்டாப் வழங்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

    கொடைக்கானலில் லேப்டாப் கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    தமிழக அரசு சார்பாக பிளஸ்-2 முடித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக லேப்டாப் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் மாணவ-மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல் அரசு பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உத்தரவிடப்பட்டு அதிகாரிகளின் அலுவலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனவே தங்களுக்கு லேப்டாப் கிடைக்கும் என மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

    ஆனால் அதிகாரிகள் லேப்டாப் வழங்காமல் தாமதம் செய்துள்ளனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வத்தலக்குண்டு - கொடைக்கானல் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சம்பவம் குறித்து அறிந்ததும் கொடைக்கானல் போலீசார் விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் மாவட்ட அதிகாரிகளிடம் முறையிடுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×