என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- முன்னணி நிறுவனங்களின் Water Heater-களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
- பொங்கல் சிறப்பு சலுகைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது.
பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு என்பது கனவு... அப்படிப்பட்ட வீட்டில் தரமான பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தணும் என்று நினைப்பர். அதிலும் குறிப்பாக ஃபேன், வாட்டர் ஹீட்டர் போன்ற மின் சாதனங்களை தரமானதாக வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு 52 வருடங்களாக நம்பிக்கையுடன் SK Electricals நிறுவனம் செயல்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவின் No.1 Fan Dealer-ஆக விளங்குகிறது.

SK Electricals கடைகளில் கிராம்ப்டன் (Crompton), உஷா (Usha), வி-கார்ட் (V Guard), ஓரியண்ட்(Orient), ஹேவல்ஸ் (Havells), அல்மோனார்ட் (Almonard), ஆட்டம்பெர்க் (Atomberg), சூப்பர் ஃபேன் (Super Fan), ரெமி (Remi), போலர் (Polar), சின்னி ஃபேன் (Cinni), போல் ஸ்டார் (Polstar) உள்ளிட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களின் Fan-களும் மற்றும் வீனஸ் (Venus), வி-கார்ட் (V Guard), எலாக் (Elac), ராகோல்ட் (Racold), ஏஓ ஸ்மித் (AO Smith), ஹேவல்ஸ் (Havells) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் Water Heater-களும் ஒரே இடத்தில் கிடைக்கும். இங்கு பொங்கல் சிறப்பு சலுகைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது.

தரம், நம்பிக்கை, சிறந்த விலையில் SK Electricals-ல் நிறுவன கிளைகளில் வாங்கலாம். எங்களது கிளைகள்,

1. என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்பா தெரு, பிராட்வே, அண்ணாசாலை ஸ்பென்சர் அருகில், அடையாளர் டெலிபோன் விரிவாக்கம் அருகில் மற்றும் தி.நகரில் அமைந்துள்ள கிளைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை தந்து பொங்கல் சிறப்பு சலுகை விலைகளில் தரமான மின்சாதன பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
- பா.ம.க. தந்தை டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், மகன் டாக்டர் அன்புமணி தலைமையிலும் 2 பிரிவாக செயல்படுகிறது.
- அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்றால் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.
சென்னை:
தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் மற்ற கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
அதேநேரம் சிறிய கட்சிகள் எந்த கூட்டணியில் இணைவது? எந்த கூட்டணியில் இணைந்தால் என்னென்ன லாபம்? என்று கணக்கு போட்டு கூட்டணிகளில் இடம்பிடித்து வருகின்றன.
இப்போதைய நிலையில் எந்த கணக்கு போட்டாலும் தீர்வு கிடைக்காமல் தடுமாறுவது டாக்டர் ராமதாஸ்தான்.
பா.ம.க. தந்தை டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், மகன் டாக்டர் அன்புமணி தலைமையிலும் 2 பிரிவாக செயல்படுகிறது. நான்தான் அதிகாரப்பூர்வமான பா.ம.க. யாராக இருந்தாலும் என்னிடம்தான் கூட்டணி பேச வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி வந்தார்.
அதே நேரம் கட்சியும் என்னிடம்தான் உள்ளது. கட்சியின் மாம்பழம் சின்னமும் என்னிடமும்தான் உள்ளது என்று கூறி வரும் டாக்டர் அன்புமணி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறைப்பட அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துவிட்டார். கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த நிலையில் தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?, த.வெ.க.வா? எங்கு செல்வது என்று முடிவெடுக்க முடியாமல் டாக்டர் ராமதாஸ் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால் அங்கு அன்புமணி இருக்கிறாரே என்று யோசிக்கிறார். தி.மு.க. பக்கம் சென்றால் எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகள் கிடைக்காது என்ற சூழல். புதிய கட்சியான த.வெ.க.வுடன் இணைந்தால் கூடுதல் தொகுதிகள் கிடைக்கலாம். ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று யோசிக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்றால் 20-ந்தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையில் அனைத்து தலைவர்களுடனும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். எந்த முடிவாக இருந்தாலும் வருகிற 22-ந்தேதிக்குள் ராமதாஸ் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
- எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு, எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்ற உள்ளார்.
- ஆங்காங்கே எம்.ஜி.ஆர். படங்களை வைத்து மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வருகிற 17-ந்தேதி அன்று எம்.ஜி.ஆர். உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே எம்.ஜி.ஆர். படங்களை வைத்து மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
- உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அதே போல் வருகிற பொங்கல் பண்டிகையை யொட்டி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்ப ரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.
பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.
தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளி விவரங்களும் தர வரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன.
1 கோடியே 30 லட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ் நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 லட்சம் அரிசி அட்டை தாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது.
தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று.
தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள். அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் கழகத்தின் மாவட்ட – ஒன்றிய –நகர – பகுதி -பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கழகத்தினர் நடத்துகின்ற பொங்கல் விழாக்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றையும் நான் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.
கோலப்போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் வண்ணக் வண்ணக் கோலங்களை வரைந்து, சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட மாடல் அரசு தொடரட்டும் என்ற வாசகங்களை எழுதுவதும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிலும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையே வண்ணக் கோலங்களாக வரைந்து, பார்வையாளர்களின் கண்களை ஈர்த்து, நெஞ்சில் பதிய வைப்பதும் அருமையான நிகழ்வுகளாகத் தொடர்கின்றன.
உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அமைச்சர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கழக நிர்வாகிகள் நடத்துகிற ஒவ்வொரு பொங்கல் விழாவும் தமிழ் மணத்துடனும் தமிழர் பண்பாட்டுத் திறத்துடனும் கொண்டாடப்படுகின்றன.
கழகம் நடத்துகின்ற பொங்கல் விழாக்களில் வழங்கப்படும் அன்பான பரிசுகள், அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பணியாற்றும் உடன்பிறப்புகளின் கைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் தெரிவித்திடக் கடமைப்பட்டு உள்ளேன்.
தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ம் நாள் அதாவது, தை மாதம் 3-ம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.
தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், பாராளுமன்றக் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன்.
சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடை பெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் - தைப்பொங்கல் வாழ்த்துகள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.
- கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேற்று த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அடுத்த வாரம் மீண்டும் விஜய் ஆஜராக உள்ளார்.
* எந்த தேதியில் விஜய் மீண்டும் ஆஜர் என்பது தொடர்பாக முடிவு செய்யவில்லை.
* விசாரணை குறித்த தகவல்களை வெளியே சொல்வது மாண்பாக இருக்காது.
* சி.பி.ஐ. விசாரணையில் த.வெ.க. தலைவர் விஜய் தேவையான விளக்கத்தை அளித்திருந்தார்.
* பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர்.
* ஜன நாயகன் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது கருத்து கூற முடியாது.
* கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.
- புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் தைப்பொங்கல் சிறப்பு வழிபாடு செய்வதற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தவாறு உள்ளனர்.
தென் மாவட்டத்தை சேர்ந்த தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் ஆண்டு தோறும் தைப் பொங்கலுக்கு முன்பு பாதயாத்திரையாக முருகன் படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்ட வாகனங்கள் முன் ஆடி பாடி வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.
அவர்கள் இன்று அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மறுநாள் (15-ந்தேதி) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
- ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
குத்தாலம்:
மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் தங்கம் உருக்கும் தொழில் கூடம் உள்ளது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரிடம் அதே மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்ற 17 வயது சிறுவன் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில், சுஹாஷ் மற்றும் ஓம்கார் மட்டும் நேற்று கடையில் இருந்துள்ளனர். அப்போது சுமார் 1½ கிலோ தங்க நகைகளை உருக்கி, அதனை தங்க கட்டியாக மாற்றிய சுஹாஷ், அதனை எடை போட்டு எடுத்து வருமாறு சிறுவன் ஓம்காரிடம் கொடுத்துள்ளார். அதனை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்த ஓம்கார், திடீரென மனம் மாறி தங்க கட்டியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடி தலைமறைவானார். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
உடனடியாக இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை லாவகமாக மடக்கி கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்த 1½ கிலோ தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
- யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
- அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் நாட்டு வெடி குண்டை விழுங்கியதால், இரண்டு வயது பெண் யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள குத்தியாலத்தூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, இறந்து கிடந்த யானை குட்டியின் உடலைக் கண்டெடுத்தனர்.
வனத்துறை கால்நடை மருத்துவர் நடத்திய முதற்கட்ட சோதனையில், யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
யானை குட்டியின் பிரேத பரிசோதனையில், அது சக்தி வாய்த்த நாட்டு வெடிகுண்டை விழுங்கியதால் வாய் சிதைந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
காட்டுப்பன்றிகள் அல்லது யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதைத் தடுக்க விவசாயிகள் இது போன்ற வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது வழக்கம்.
இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.
அவர் தனது விளைநிலத்தைப் பாதுகாக்க இந்த வெடிகுண்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த யானை குட்டியின் உடல், வனத்துறை விதிகளின்படி அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
- காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
- எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேற்று மும்பை தெட்சணமாற நாடார் சங்கம் கிளை சேர்மன் காசிலிங்கம் தலைமையில் பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ஜஸ்டின், ஆல்பர்ட் உட்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

கடந்த 2 நாட்களாக தாராவி பகுதியில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்ட எம்.பி. விஜய்வசந்த் நேற்று வார்டு 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
சாலிமார் வாடு பகுதியில் 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலுவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். நிறைவாக எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் ஹோலிவாட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.
- 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!
கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.
நாளை சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.
2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்! என்று கூறியுள்ளார்.
- திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
- மாநகர முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தரும் அவர், நாளை மாலை காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். பின்னர் இரவு அங்கு தங்குகிறார். நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனது உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா மற்றும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.
அதன்பின்னர் மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, கோவை கொடிசியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து அன்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
துணை ஜனாதிபதி திருப்பூர் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரடி மேற்பார்வையில் இரண்டு துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு யாராவது சந்தேகப்படும்படியாக தங்கி உள்ளார்களா? என விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவும் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாநகர முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே துணை ஜனாதிபதி தங்கியிருக்கும் இடம், நிகழ்ச்சி நடைபெறும் இடம், அவர் செல்லும் வழித்தடம் ஆகியவற்றில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.






