search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுத்தை
    X
    சிறுத்தை

    வந்தவாசி அருகே மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை - பொதுமக்கள் பீதி

    வந்தவாசி அருகே மாட்டை சிறுத்தை அடித்து கொன்று உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ஆரியாத்தூரை சேர்ந்தவர் தனசேகர் (வயது45). இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் விளாங்காட்டில் உள்ளது.

    இந்த தோட்டத்தில் புல் மேய்வதற்காக மாடு கட்டி வைத்திருந்தார். நேற்று மாலை 3 மணியளவில் குடல் சரிந்த நிலையில் மாடு இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கிராம மக்கள் அங்கு சென்று பார்த்த போது அருகில் சிறுத்தை கால் தடம் பதிந்த நிலையில் இருந்ததாக கூறினர்.

    மேலும் இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தாசில்தார் எஸ்.முரளி, கீழ்கொடுங்காலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கால் தடங்களை பார்த்த போது சிறுத்தைக்கான கால் தடம் போல் உள்ளதாக தெரிய வந்ததால் உடனடியாக ஆரணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து ஆரணி வனத்துறையினர் விளாகங்காடு கிராமத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

    Next Story
    ×