search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    அரசின் திட்டங்களை கெடுப்பதே தி.மு.க.வின் வேலையாக உள்ளது- ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

    அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக தி.மு.க. தலைமை முதல் தொண்டர்கள்வரை உள்ளனர் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகரில் நகரம், கிழக்கு, மேற்கு, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜவர் மன், தலைமை கழக பேச்சாளர்கள் முத்து, அறந்தை முருகேசன் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

    எங்கள் எம்.எல்.ஏ.க்கள் 20பேரை தூக்கிவிடுவோம் என்று ஸ்டாலின் கூறுகின்றார். எடப்பாடியார் கண் அசைத்தால் 60 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை நாங்கள் தூக்கி விடுவோம். இந்த ஆட்சியை ஸ்டாலினால் தொட்டுக்கூட பார்க்க முடியாது.

    வரும் 2021- ஆண்டும் அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சி அமைக்கும். எடப்பாடியார் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அ.தி.மு.க.விற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது.

    வெளிநாடு சென்று வந்ததற்கு ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கின்றார். வெள்ளரிக்காய் கூட கொடுக்க மாட்டோம் என்று கூறி விட்டோம். வெளிநாடு செல்லும் போதும் சென்று வந்த பிறகும் தமிழக முதல்வர் தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளார். மக்கள் எங்களை பற்றி புரிந்து கொண்டார்கள்.

    ஸ்டாலின் இந்த ஆட்சி மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறையை மட்டும் கூறி வருகிறார்.

    அரசின் திட்டங்களை கெடுக்கும் கூட்டமாக தி.மு.க. தலைமை முதல் தொண்டர்கள்வரை உள்ளனர். தி.மு.க.வில் மன்னராட்சிதான் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வில் மட்டும்தான் சாதாரண தொண்டனும் சரித்திரித்தில் இடம் பிடிக்க முடியும். உழைக்கின்ற தொண்டர்களுக்கு மதிப்பு கொடுக்கின்ற கட்சி அ.தி.மு.க. மட்டும்தான். வரும் உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை என்பதை நிரூபிப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×