search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    ஆவின் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    ஆவின் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்தி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, பசும்பால் கொள்முதல் விலை ரூ. 4 உயர்ந்து ரூ.32 ஆகிறது. எருமைப்பால் கொள்முதல் விலை ரூ. 6 உயர்ந்து ரூ.41 ஆகிறது.   இந்த பால் கொள்முதல் விலை  உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வால் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடைவார்கள்.

    இதுதொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  கூறுகையில், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச் செலவு உயர்ந்துள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. கொள்முதல் விலை உயர்த்தப் பட்டுள்ளதால், விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×