என் மலர்

  செய்திகள்

  ரவீந்திரநாத் குமார் எம்.பி.
  X
  ரவீந்திரநாத் குமார் எம்.பி.

  டி.ஆர்.பாலு விமர்சனத்தை கருத்தில் கொள்ளவில்லை- ரவீந்திரநாத் குமார் எம்.பி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதுகெலும்பற்ற பாராளுமன்ற உறுப்பினர் என்ற டி.ஆர்.பாலு விமர்சனத்தை கருத்தில் கொள்ளவில்லை என்று ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறினார்.
  அவனியாபுரம்:

  தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  கேள்வி:- பாரதிய ஜனதா எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சியினர் நிராகரிக்கிறார்களே?

  பதில்:- பிரதமர் இந்தியாவை புதிய இந்தியாவாக கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சுதந்திர தின விழாவுக்கு பின்னர் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் சிறப்பாக அமையும்.

  கே:- பாராளுமன்றத்துக்கு தனி எம்.பி.யாக செல்லும் தங்களை மற்ற மாநில எம்.பி.க்கள் எப்படி அணுகுகிறார்கள்?

  ப:- சக பாராளுமன்ற உறுப்பினராகத்தான் அணுகுகிறார்கள். நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.

  பாராளுமன்றத்தில் பேசிய டிஆர் பாலு

  கே:- பாராளுமன்ற கூட்டத்தின்போது தங்களை டி.ஆர்.பாலு முதுகெலும்பற்ற பாராளுமன்ற உறுப்பினர் என்று விமர்சித்ததை எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?

  ப:- நாட்டின் உரிமைக்காகத்தான் நான் குரல் கொடுத்தேன். எனவே இதுகுறித்த கருத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்

  மேலும் இதுபோன்ற விமர்சனங்களை பெரிதாக கருத்தில் கொள்வதாக இல்லை. பிரதமர் நாட்டின் வளர்ச்சிக்காக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன்.

  கே:- நீட் தேர்வு குறித்து எவ்விதமான கோரிக்கை முன்வைக்கப்படும்?

  ப:- முன்பே கூறியது போன்று தமிழக அரசின் நிலைமை மற்றும் முதல்வரின் கோரிக்கையை பாராளுமன்றத்தில் பிரதிபலிப்பேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×